எட்டியலூர், உமா மகேஸ்வர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கோராடச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். கோராடச்சேரியிலிருந்து 6 கி.மீ, திருவாரூர்லிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : நாகநாதர்
இறைவி : உமா மகேஸ்வரி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : சிவ குளம்
தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
கோவில் அமைப்பு : இக்கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. முகப்பு மண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி , பைரவர்,பிரம்ம, துர்க்கை, நவ கிரகங்கள், நந்தி ஆகிய தெய்வங்கள் உள்ளன. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு எட்டிய தூரத்தில் இருப்பதால் எட்டியூர் என்றும், சோழ மன்னர்கள் கட்டிய 108 கோவில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இக்கோவில் நாளடைவில் சிதிலமைந்து விட்டது, அச்சமயம் பஞ்சம் ஏற்பட்டது. அப்பகுதி தலையாரி ஒருவரது கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்களை தண்ணீர் கொண்டு வந்து சுத்தம் செய்து மிளகாய் அரைத்து தடவி வழிபட கட்டாயம் மழை பெய்யும் வந்து பஞ்சம் தீரும் என்று கூறினார். முதலில் எதிர்த்த மக்கள் பின்பு நிறைவேற்றியவுடன் மழை பெய்து அப்பகுதி செழிப்பானது. அதன்பின்பு காட்டில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து பூஜை செய்தனர்.
திருமண தடை, புத்திர பாக்கியம், செல்வ வளம் பெருகவும் இங்கு பிராத்தனை செய்கின்றனர். தாலி கயிறு, மஞ்ச புடைவை, வளையல் அம்மனுக்கு படைத்து சுமங்கலி பெண்ணுக்கு கொடுக்கின்றனர். சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர்.
காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை