பார்த்திபனூர்





	


	



























	




 




	








 




10:33:46 AM         Sunday, March 15, 2026

பார்த்திபனூர்

பார்த்திபனூர்
பார்த்திபனூர் பார்த்திபனூர் பார்த்திபனூர் பார்த்திபனூர் பார்த்திபனூர் பார்த்திபனூர்
Product Code: பார்த்திபனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    பார்த்திபனூர், சங்கரனார் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  ராமநாதபுரம் மாவட்டத்தில்  சிவகங்கையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : சங்கரனார் (சொக்கநாதர்)
இறைவி  :  மீனாட்சி 
தல தீர்த்தம் : சங்கரன் குளம் 
தல விருட்சம் : மாவலிங்க மரம் 

தல சிறப்புகள் : மூலவராக சங்கரனார் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தில் சங்கரனார், சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சியின் உருவ அமைப்பில் அம்பிகை காட்சி தருவது சிறப்பாகும்.

தல வரலாறு :  பண்டைய காலத்தில், மகாபாரத போரில் பாண்டவர் மற்றும் கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டனர். ‘‘சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தை பெற்றால் துரியோதனனை எளிதில் வெற்றி பெறலாம்’’ என்று அர்ஜுனனுக்கு, வியாசர் ஆலோசனை வழங்கினார். அதன்படி அர்ஜூனனும் சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். இதனையறிந்த துரியோதனன், அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜூனன் அம்பு எய்து கொன்றார். அங்கு வேடன் வடிவில் வந்த சிவபெருமான், ‘‘பன்றியை நான்தான் கொன்றேன். எனவே அது எனக்கு சொந்தமானது’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுனன், வேடன் மீது அம்பெய்தார். அம்பு பட்டதால் வேடனின் தலையில் காயமேற்பட்டது. ரத்தம் வழியும் நிலையில் தனது சுயரூபத்தை அர்ஜுனன் முன்பு சங்கரனார் வெளிப்படுத்தினார். இதனால் வருந்திய அர்ஜுனன், சிவபெருமானிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சிவபெருமான் அவரை மன்னித்ததுடன், அவருக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கினார். பின்னர், அர்ஜுனன் பல சிவத் தலங்களுக்கு சென்று வழிபட்டார். இந்த கோயிலுக்கும் வந்து, இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளார்.

தனது பாடலில் பிழை இருப்பதாக கூறி தன்னை எதிர்த்த நக்கீரரை, சிவபெருமான்  நெற்றிக்கண்ணால் எரித்தார். சங்கப்புலவர்கள் வேண்டியதால், சிவபெருமான் நக்கீரரை மீண்டும் உயிர்ப்பித்தார். தவறை உணர்ந்த நக்கீரர், சிவபெருமானை வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் பல சிவன் கோயில்களுக்கு அவர் யாத்திரை சென்றார். யாத்திரையின் போது, இங்குள்ள மூலவரையும் அவர் வழிபட்டார். நக்கீரர் சிவபெருமானுடன் வாதம் செய்த போது, ‘‘சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்’’ என்றார். சிவபெருமானை சங்கரனார் என்று நக்கீரர் குறிப்பிட்டதால், இந்த தலத்தில் சங்கரனார் என்ற பெயரில் மூலவர் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு : சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் சிலைகள் உள்ளன. சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பிகைக்கு தனிச்சன்னதி உள்ளது. இவள் மதுரை மீனாட்சியின் அமைப்பில் காட்சி தருவது விசேஷம். கோயில் வளாகத்தில் தலவிருட்சம் மாவலிங்க மரம் இருக்கிறது. பார்த்தனாகிய அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால், “பார்த்தனூர்” என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் இவ்வூர் “பார்த்திபனூர்” என்று மருவியது. புராதனமான இக்கோயில் தற்போது பாழடைந்து இருக்கிறது. மூலவர் சன்னதியும், முன்மண்டபத்துடன் மட்டும் தற்போது இக்கோயில் காட்சியளிக்கிறது. இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். முருகன் சிலை, திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. எதிரே பாலமுருகன் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோயில் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் சுவாமி சிலைகள் அனைத்தும் முன் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.

திருக்கார்த்திகை, சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். மூலவரை வேண்டினால் மனக்குழப்பங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை, கிரக தோஷம் நீங்க அம்மனிடம் வேண்டுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 9.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : சிவகங்கை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை
 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×