உடையார் பாளையம்





	


	



























	




 




	








 




4:03:01 AM         Monday, February 09, 2026

உடையார் பாளையம்

உடையார் பாளையம்
உடையார் பாளையம் உடையார் பாளையம் உடையார் பாளையம் உடையார் பாளையம்
Product Code: உடையார் பாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        உடையார் பாளையம், பயறணீநாத சுவாமி 

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில்  உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான  கோயில். ஜெயங்கொண்டத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அரியலூர், திருச்சி, விருத்தாசலம் ஆகிய ஊர்களிலிருந்து  நேரடி பேருந்து வசதி உண்டு. 

இறைவன் : பயறணீஸ்வரர், முற்கபுரீஸ்வரர்
இறைவி : நறுமலர் பூங்குழல் நாயகி, சகுந்தகுந்தளாம்பிகை
தல தீர்த்தம்  : வில் வடிவ தீர்த்தம்
தல விருட்சம் : மகிழ மரம்

தல சிறப்புகள் : இங்கே உள்ள “திரு பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார்  அருச்சுனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம்.  இவர் திருக்கரத்தில்  ஒரு வில் உள்ளது. இத்தலத்தை முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளர். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட ராகு தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். நவகிரகங்கள் அவற்றுக்குரிய வடிவ பீடங்களில் காணப்படுகிறது. இத்தலம் நவக்கிரக பரிகார தலமாக உள்ளது. பிரதோஷம், பௌர்ணமி அன்று இறைவனை மற்றும் காண்டீப தீர்த்தத்தை வழிபட கைலாயம், கங்கை சேர்ந்து வழக்கு வந்த பலனை கொடுக்கும். தீர்த்த குளம் வற்றியதே இல்லை. 

தல வரலாறு :  இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  இவ்வூர்  வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப்பட்டதால்  அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்தி விட்டுக் கொண்டு செல்ல,  விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகி இருக்கவே, இத்தல  சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பது உணர்ந்து இங்கு  வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிற்கள் எல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான்.   இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு  "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. பல்லவர்களின் வழித்தோன்றல்களான பிரம்ம வன்னியகுல சத்திரியர்கள், கங்கானுஜ பார்க்கவ கோத்திரம் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.  வடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார் பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார் பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு கி.பி. 18ஆம் நூற்றாண்டு கூறுகிறது. 

காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள். இதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார் பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும்,  மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஜெயங்கொண்டம்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×