அலகாபாத் (கங்கை - யமுனா - சரஸ்வதி )
அமைவிடம் : இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா. பிரயாக் என்று அழைக்கப்பட்ட ஆரியர்களின் மிகவும் பழமையான புனித நதிகளான கங்கா மற்றும் யமுனாவின் சந்திப்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் மேலாக மில்லியன் கணக்கான இந்து பக்தர்களை ஈர்க்கும் புனித நதிகளின் சங்கமத்தில் நடைபெறுகிறது. கங்கை, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமம்.
அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயனி, நாசிக் ஆகிய நகரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது. இது தவிர 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாக்களின்போது பக்தர்கள் நதிகளில் புனித நீராடுவது வழக்கம்.
அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர். மஹா கும்பமேளா பன்னிரெண்டாம் வருடத்தில் அலஹாபாத்தின் பிரயாக்கில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட உலகம் முழுவதும் இருந்தும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களும், பக்தர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு கூடுகின்றனர். இவர்கள் கங்கை நதியின் கரைகளில் சடங்குகளுடன் புனித நீராடுவர். திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது.
கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். இங்கு நீராடுவது மிகப் புனிதமான சடங்கு. அப்படி நீராடும் ஒருவன் தான் ஏழுபிறவியில் செய்த அனைத்து பாவங்களையும் நீங்கி பிறப்பில்லா முக்தி நிலையை அடைவான் என்பது ஐதிகம்.
வரலாறு : துர்வாச முனிவர் சிவனிடமிருந்து பெற்ற மாலையை ஐராவதத்தின் மேல் உட்கார்ந்து வந்த இந்திரனிடம் கொடுத்தார். எப்போதும் ஒரு வித மமதையில் இருக்கும் இந்திரன் அந்த மாலையின் பெருமையையும், துர்வாச முனிவரின் கோபத்தையும் அறியாமல் உதாசினப்படுத்தியபடி அந்த மாலையை தன் யானையிடம் கொடுக்க, யானை காலில் போட்டு மிதித்துவிட்டது. இதைப் பார்த்த துர்வாச முனிவர் கொதித்தெழுந்து விட்டார். இந்திரனே என்ன காரியம் செய்துவிட்டாய் பதவியும் செல்வமும் உன்னை ஆணவத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. இக்கணம் முதல் உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் இழந்து நீயும் உன்னை சார்ந்தவர்களும் பராரிகளாக மாறுவீர்கள் என்று சாபமிட்டபடி சென்று விட்டார்.செய்த தவறை உணர்ந்தான் இந்திரன். ஆனால் அதற்குள் தேவலோகத்தில் இருந்தவர்கள் தங்கள் சுகங்களைஇழந்துவிட்டனர். அவர்களிடமிருந்த செல்வங்களும், சுகங்களும் கைவிட்டு நழுவியது. தேவர்களின் இத்தகைய பராரி கோலத்தைக் கண்ட அசுரர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. எங்கு காணினும் அசுரர்களே இருந்தனர். தேவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. எத்தகைய சாபத்தை பெற்றுவிட்டோம். இனி இதற்கு என்ன தீர்வு என்று தேவர்கள் ஒன்று கூடி யோசித்தபோது கலகத்தின் அதிபதி நாரதரின் நினைவு வந்தது.
அவர் தேவர்களின் நிலையை அறிந்து பாவம் நீங்கள் என்றபடி பிரம்மாவிடம் அழைத்து வந்தார். துர்வாச முனிவரின் சாபத்தை நீக்குமளவுக்கு என்னால் எதுவும் செய்ய இயலுமா தெரியவில்லை. வேண்டுமானால் உலகமும், படைக்கும் தொழிலும் சிறந்து விளங்க பரப்பிரம்மே பல அவதாரங்களை எடுத்து வருவது நாம் அறிந்ததுதான், என்னால் ஒன்று மட்டும் செய்யமுடியும். உங்களுக்கு துணையாக வரமுடியும் என்றபடி தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமனிடம் அழைத்துச்சென்றார். பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வரும் அமுதத்தை நீங்கள் சாப்பிட்டால் இழந்த பலம் உங்களுக்கானது, அனைத்தும் கிடைக்கும் என்று கூறினார். தேவர்கள் அசுரர்களை சூட்சுமமாக அணுகி அவர்கள் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு புனிதம் மிக்க பொருள்கள் உதயமாகின. ஒருவழியாக அமுதகலசத்துடன் வந்த தன்வந்திரி பகவான் கண்ணில்பட்டார்.
அமிர்த திரவம் சமுத்திர மந்தனுக்குப் பிறகு கருடனால் எடுத்துச் செல்லப்படும் போது பெரிய குடுவை ஒன்றிலிருந்து சிந்திய நான்கு இடங்களில் ஒன்றாகும். அலஹாபாத், உஜ்ஜயின், ஹரித்வார், நாசிக், ஆகியவை இந்த நான்கு இடங்களாகும்.
அருகில் உள்ள விமான நிலையம் : வாரணாசி
அருகிலுள்ள ரயில் நிலையம் : அலஹாபாத்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு