39. திருப்பனந்தாள்





	


	



























	




 




	








 




10:02:20 AM         Sunday, March 15, 2026

39. திருப்பனந்தாள்

39. திருப்பனந்தாள்
39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள் 39. திருப்பனந்தாள்
Product Code: 39. திருப்பனந்தாள்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  செஞ்சடையப்பர் கோவில், திருப்பனந்தாள்

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம். 

சுவாமி :  செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர்

அம்பாள் :  பிரஹந்நாயகி

தல விருட்சம் :  பனை மரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவததீர்த்தம், தடாகைதீர்தம், நாககன்னிகை தீர்த்தம், மண்ணியாறு 

பதிகம் :  திருஞானசம்பந்தர்

சிறப்புகள் : மூலவர் சுயம்பு மூர்த்தி. சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது.  பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம் அகத்தியர், சந்திரன், சூரியன், ஆதிசேடன், நாககன்னிகை, தர்மசேனன், எக்ஞகுப்தன், தாடகை குங்குலியக்கலய நாயனார், சங்குகன்னன், நாகுன்னன் முதலியோர் பலரும் வழிபட்டுப் பேறு பெற்றார்கள். தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம். பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன. இவை தலம் தோன்றிய காலம் முதல் இன்றளவும் செழுமையாகவுள்ளன. 

கோவில் அமைப்பு : மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.

ஆலயத்திற்குத் தென் மேற்கு மூலையில் ஊருடையப்பர் கோயில் இருக்கிறது. மேலும் ஐயனார், மாரியம்மன் முதலிய தெய்வங்களுக்கும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன. ஊருடையப்பர் ஆலயம் பிரமதேவன் வழிபட்டது. இது பிரமனால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு சாப விமோசனத்தை விரும்பிய ஐராவதம் வழிபட்டு வந்து, அதனைக் கண்டு கலக்கமுற்றான் பிரமன், திருமாலைக் குறித்துத் தவம் இயற்றி அவன் அருளால் சிங்கமுகத்துடன் இம்மாடக கோயிலை அமைத்து வழிபட்டு வேண்டியன் பெற்றான்.  மேற்கில் விஷ்ணு ஆலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 

தல வரலாறு : அசுரகுல மகளான தாடகை என்பவள் தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் வள்ளி தேவசேனாதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். ஒரு உற்சவர் மூலவரைப் போன்றும் மற்றொரு உற்சவரான முத்துக்குமாரசாமி மயிலின்றியும் காட்சி தருகின்றனர்.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : கும்பகோணம்,  மயிலாடுதுறை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×