ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா





	


	



























	




 




	








 




1:54:34 AM         Monday, April 21, 2025

ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா

ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா
ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா
Product Code: ஆற்றுக்கால் பகவதி - திருவனந்தபுரம் - கேரளா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


ஆற்றுக்கால் பகவதி அம்மன்
திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
தல தீர்த்தம் : கிள்ளியாறு
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவதால், இது ‘பெண்களின் சபரிமலை‘ என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் நுழைய பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆண்களில் 12 வயதுக்கு மேற்பட்ட யாரும் உள்ளே செல்லக்கூடாது. இங்கு அருள் பாலிக்கும் பகவதி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்த பின்பு அவரை பெண்கள் பொங்கலையிட்டு சாந்தப்படுத்தும் நிகழ்ச்சியே பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. 
தல வரலாறு: இக்கோவிலில் தெய்வமாக இருப்பது கண்ணகி (பார்வதி) ஆகும். கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் இங்கே ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டாள். பெரியவரோ, சிறுமி தனியாய் இருப்பதை அறிந்து அன்போடு தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டிற்குச் சென்றதும் மாயமாய் மறைந்த சிறுமி பின்னர் பெரியவரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டுமாறு சொல்ல, அதனால் கட்டப்பட்டதே இக்கோவில். பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்வர்.
தமிழக மண்ணில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி தெய்வமாக வீற்றிருந்து மக்களுக்கு அருளாசி வழங்கும் இடம்தான் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் ஆகும். அங்கு கிள்ளியாற்றின் கரையில் பகவதி அம்மனாக கண்ணகி குடிகொண்டுள்ளதாக தலப்புராணம் கூறுகிறது. பாண்டிய மன்னனின் மனைவிக்கு சொந்தமான கால் சிலம்பை திருடியதாக கூறி தனது கணவன் கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி கொதித்தெழுந்தாள். நேராக பாண்டிய மன்னனிடமே சென்ற கண்ணகி, நீதி கேட்டு தனது கால் சிலம்பை உடைத்தாள். அதன் மூலம் தனது கணவன் கோவலன் கள்வன் அல்ல என்பதை நிரூபித்தாள். பின்னர், மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு சேர நாட்டில் உள்ள கொடுங்கல்லூரை அடைந்து, அங்கிருந்து விண்ணுலகத்திற்கு கண்ணகி சென்றதாகவும், அவ்வாறு செல்லும் வழியில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் கண்ணகி இளைப்பாறியதாகவும் கூறப்படுகிறது.  இதனால் இங்கு நடக்கும் விழாவில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு வருகிறார்கள்.
பரசுராமரால் உருவாக்கப்பட்ட பகுதியே இன்றைய கேரளம் என்கிறது புராணத் தகவல்கள். இதன் காரணமாகவும் கேரளத்தை இறைவனின் ஊர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தை உருவாக்கிய போது, பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது. 

கோவில் அமைப்பு : ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத்தகடால் வேயப்பட்டது. கோவிலில் சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் மேல் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
திறக்கும் நேரம்:  தினமும் காலை 4.30 மணி  முதல் இரவு 8.30 மணி  வரை கோவில் திறந்திருக்கும். 
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் 7 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவனந்தபுரம் சென்ட்ரல் 2 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×