மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா





	


	



























	




 




	








 




12:12:03 AM         Monday, April 21, 2025

மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா

மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா
மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா
Product Code: மகிஷாசுர மர்த்தினி - மத்தூர் - ஆந்திரா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர்  மாவட்டத்தில் சென்னை- திருப்பதி சாலை திருத்தணிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில்.
தல மரம் : வேம்பு
பாடியவர்  : அபிராமி பட்டர்

மகிஷாசுரமர்த்தினி என்பது மகிசாசூரன் எனும் அரக்கனை அழிக்க சக்தி எடுத்த வடிவமாகும். இவரை மகிடாசுர மர்தினி என்றும் கூறுகின்றனர்.  மகிசாசுரன் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே இறப்பு நேரிட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். அதனால் சிவபெருமானின் மனைவியான சக்தி, தேவர்களிடமிருந்து சக்திகளைப் பெற்று அவனுடன் போரிட்டு அழித்தார்.
சிறப்புகள் : அன்னை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி சாந்த சொரூபினியாகவும், மலர்ந்த முகத்தோடும் மூலவராக வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். வேப்பமரத்தின் குணமே கசப்புதான். ஆனால் கசக்காத வேப்பிலை உள்ள தலம், 
இக்கோயிலில்தான் இந்த கசக்காத வேப்பிலை மரம் இருக்கின்றது. பக்தர்களுக்கு இங்கு பிரசாதமாக இந்த வேப்பிலையே கொடுக்கப்படுகிறது.
எட்டு கரங்களில் சங்கு சக்கரம், வில்,  மாலை ஆகியவற்றை தரித்து மகிடாசுரனை தனது திருசூலத்தால் குத்தி வென்ற அருட்பார்வையால் உலகினை நோக்கும் சாந்த சொரூபினியாக அன்னை எழுந்தருள் புரிந்து
வருகிறாள்.  ஏழு அடிக்கும் மேல் நெடிதுயர்ந்து மகிடாசுரனின் தலையின் மேல் அன்னை நடனம்புரியும் காட்சி காண்பவர்களுக்கு பக்திப் பரவசத்தையும் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி பிரமிப்பையும்
மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தும். 
ஸ்தல வரலாறு : உலகங்கள் யாவற்றையும் கடைக்கண் அருட்பார்வையினால் காக்கின்ற தெய்வம் அம்பிகை.   பூமியில் இருந்து வெளிப்பட்டு சுமார் 45 ஆண்டுகளாகின்றன. இத்திருத்தலம்  64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது. மத்தூர் எல்லையில் 1964 ஆம் ஆண்டு அரக்கோணம் - ரேணிகுண்டா இரண்டாவது இருப்பு பாதை போடும் பணி நடைப்பெற்றபோது சக்திமேடு என்ற இடத்தில் கூலியாட்கள் கடப்பாறையால் மண்ணைப் பெயர்த்தார்கள்.  ஒரு கூலியான் கடப்பாறையால் பூமியைக் குத்தும்போது  வெங்கல சப்தம் கேட்டது.  அந்த கூலியான் வெங்கல தெய்வ அருளால் மயக்கமடைந்தான்.  கூட்டம் கூடி மண்ணை அகற்றினர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.  அன்னை மலந்த முகத்தோடு, எட்டு கரங்களுடன்
கம்பீரமான திரு உருவத்தோடு பூமியில் இருந்து எழுந்தருளினாள். 
சக்தி பீடம்: அன்னை மஹிஷாசுரமர்தினி பல ஆண்டுகளாக பூமிக்குள் இருந்த போது அந்தபகுதி "சக்திமேடு" என்று பெயர் பெற்று விளங்கியது.  இங்கு உச்சிப்பொழுதில, இரவு நேரத்திலோ வருபவர்களை அன்னை தனது மகா சக்தியால் மூர்சையுறச் செய்து வந்தாள்.  அன்னையின் திருவுருவம் புதைந்து கிடக்கும் இரகசியம் தெரியாமல் மக்களிடத்தில் ஒருவித பயபக்தி நிலவி வந்தது.  அன்னையின் திருவுருவம் வெளிப்பட்ட பின் இன்றுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்வதில்லை.
தல வரலாறு :  எருமையின் வடிவம் கொண்ட மகிஷன் என்னும் அரசன் பல காலம் பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல்வேறு வரங்களுடன் ஒரு பெண்ணால் மட்டும் எனக்கு மரணம் வரலாம், வேறு யாராலும் எனக்கு மரணம் விளையக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான்.  பெற்ற வரத்தால் தேவர்களை வாட்டி வதைத்து வந்தான்.  தேவர்கள் அத்த அசுரனை அழித்து தங்களைக் காக்க எலலாம் வல்ல அம்பிகையின் அருளை பெற வணங்கி வேண்டினார்கள்.  மகிடாசுரனை வதைக்க தேவி புறப்பட்டாள்.  பராசக்தியே தன்னை அழிக்க வந்திருப்பது தெரியாமல் "நீ என்னைத் திருமணம் செய்து கொண்டால் அகில உலகத்திற்கும் தலைவியாகலாம்"என்று பிதற்றினான்.  அம்பிகை மகிடாசூரனை அழிக்க ஒன்பது நாள் தவமிருந்து பேராற்றலைப்பெற்று ஒன்பதாம் நாள் மகிடாசுரனின் ஆணவத்தை அழித்து அவனுக்கும் அருள் புரிந்தாள்.  இவ்வாறு தேவர்களுக்கும், உலக மக்களுக்கும் நலம் விளைவித்து மகிடாசுரமர்தினி ஆனாள்.  அந்த நாட்களையே நாம் " நவராத்திரி" தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். எட்டு கரங்களுடன், சிம்ம வாகனத்தில் வந்த அன்னையின் திருசூலம் அசுரனின் உடன்மீது பட்டதும், அவன் தனது தவறை உணர்ந்து தாயை வணங்கினான்.  அம்பிகை அவனை மன்னித்து அருள்புரிந்து அவன்மீதே ஆனந்த தாண்டவம் புரிந்தாள்.  
நடை திறக்கும் நேரம் :  தினமும் காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரையும் மாலை 3.00  மணி முதல் இரவு 9.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை  87 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்தணி   
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×