சென்னை- மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மயிலாப்பூரில் முண்டக்கண்ணி அம்மன் கோயில் மயிலை வடக்கில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.
உற்சவர் : முண்டக்கண்ணி
தல மரம் : ஆலமரம் , அரச மரம்
மயிலாப்பூரின் பழமையான ஆலயம், ராகு - கேது தோஷம் நீக்கும் தலம், காலையில் தொடங்கி மதியம் வரை தொடர்ந்து அபிஷேகம் காணும் அம்மன் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன்.
சிறப்புகள்: சூல வடிவமாக காட்சி தருகிறாள். கிழக்கு நோக்கிய சுயம்பு வடிவமாக எழுந்து அருள்கிறாள். கருவறை விமானத்தில் அம்மனின் திரு உருவம் சுதை வடிவில் காணப்படுகிறது ஐந்து தலை நகம் குடை பிடிக்க தேவ கன்னியர் வெண்சாமரம் வீச காட்சி தருகிறாள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் தலமாக கருதப்படுகிறது. இக் கோவில் தீர்த்தம் சின்னம்மை நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. நாகதோஷ நிவர்த்தி தலமாகும். கோவிலுக்கு பின்னால் இருக்கும் புற்றில் பாம்பு தினமும் முண்டக்கண்ணி அம்மனை வழிபடுவதாக கூறப்படுகிறது. காலை மாலை அபிஷேகதில் மஞ்சள் குங்குமம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர். கருவறையின் மேற் கூரை தென்கீற்றல் வேயப்பட்டு உள்ளது. 1300 வருடம் பழமையான கோவில்.
நாரத விநாயகர், முருகர், ஐயப்பன், இராமலிங்க அடிகள், காசி விஸ்வநாதர் அன்னபூரணி இணைந்து தட்சிணாமூர்த்தி கோவில்கள் இருக்கிறது.வட பாகத்தில் ஏழு கன்னியர் ரூபமற்ற சீலா உருவத்தில் காட்சி தருகிறாள்.இரண்டு பக்கங்களிலும் ஜமக்கனியும் பரசுராமரும் காவல் தெய்வங்களாகள்ளனர். தாமரை மலர் போன்ற விழிகளை கொண்டவள். அம்மன் இயற்கை சூழப்பட்ட வேண்டும் பிடிக்கும் என முக்கிய கோவிலையும் ஓலை கூரை இயல்பாகவே கட்டப்பட்டு உள்ளது.
இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம். மேலும், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள். இந்த கோவில் மயிலாப்பூர் பிற கோயில்களினதும் ஒப்பிடும் போது ஒரு சிறிய கோவில், ஆனால் அது அம்மன் அற்புதங்கள் எண்ணற்ற உள்ளன. முண்டக்கண்ணி அம்மன் சரஸ்வதி வடிவம் என்று கூறப்படுகிறது.
இடப்புறமாகயுள்ள சன்னதில் அழகிய உத்ஸவ மூர்த்தியும், பின் புறமாக ஆலமரத்தினடி நாக புற்றும் மற்றும் நாக தேவதையை தரிசிப்பவருக்கு தோச நிவர்த்தி கிடைக்கிறது.
நடை திறக்கும் நேரம்: தினமும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு