ஹிங்குலாஜ்- பாகிஸ்தான்





	


	



























	




 




	








 




12:14:30 AM         Monday, April 21, 2025

ஹிங்குலாஜ்- பாகிஸ்தான்

ஹிங்குலாஜ்- பாகிஸ்தான்
ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான் ஹிங்குலாஜ்- பாகிஸ்தான்
Product Code: ஹிங்குலாஜ்- பாகிஸ்தான்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஹிங்குலாஜ் - கோடரீ தேவி

திருத்தல அமைவிடம் : பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தில் கராச்சியின்வடமேற்குக்கு 250 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.
இறைவன் : பீமலோசனர்
அன்னை : பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ
ஹிங்லாஜ் பீடம்

சிறப்புக்கள் : குகையில் இரண்டு சுயம்பு வடிவங்கள் உள்ளன.இந்த சுயம்புவே ஹிங்குலாஜ் மாதாவின் வடிவமாகும்.சுயம்பு வடிவத்தில் செந்தூரம் பூசப்பட்டிருக்கும்.கோவில் அதிகாலை முதல் மாலையில் இருள் சூழும் நேரம் வரை திறந்திருக்கும்.மனிதனால் உருவாக்கப்பட்ட படம் இல்லை.ஒரு சிறிய வடிவமற்ற கல் மாதாவாக வணங்கப்படுகிறது.சக்தி பீட வரிசையில் 45வது பீடமாக விளங்குகிறது இது, அன்னையின் உடற்கூறுகளில் உச்சந் தலைப் பகுதி விழுந்த  இடமாகக் கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு : இந்த கோவில் ஒரு சிறிய குகையில் அமைந்துள்ளது.குறைந்த மண் பலிபீடம் உள்ளது. கணேஷ் தேவா, மாதா காளி, குருகுகாக் நாத் டோனி,பிரகாம் குத்,திரு குந்த்,குருணானக் கரோவ்,ராம்ஜோர்கா பெத்தக்,அனெல் குந்த் மீது சோரசி மலை,சந்திரா கூப்,கரீரிவர் மற்றும் அகூர் பூஜா ஆகியோர் உள்ளனர்.குகைக்கு நுழைவாயில் சுமார் 50 அடி உயரத்தில் உள்ளது.இந்த குகை முடிவில் புனித தலமாக விளங்கும் சன்னதி உள்ளது. இது சிவப்பு உடைகள் மற்றும் விறைப்புத்தன்மை கொண்டது. சன்னதிக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்கே பாயும் ஹிங்கோல் நதிக்கரையில் உள்ளது. 

சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் உச்சந்தலை இப்பகுதியில் விழுந்ததால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்லாஜ்  என்று பெயர் வந்ததாம். 

அன்னையின் இடது கண் போல்,கிழக்கிலுள்ள அஸ்ஸôம் மாவட்டத்தில் காமாக்யா  மகாசக்தி பீடமும், தேவியின் வலது கண் போல் மேற்கிலுள்ள பலுசிஸ்தானின் ஹிங்லாஜ் மகாசக்தி பீடமும், பராசக்தியின் நெற்றிக் கண் போல் காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவி தேவி சக்தி பீடமும்  முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

தல வரலாறு  : முதலாவது சக்தி பீடமாகக் கூறப்பட்டுள்ள இந்த ஆலயத்தை ராமனும் சீதையும் இலக்குவனும் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்ததாக தல வரலாறு கூறுகிறது.பாகிஸ்தான் நாடு பிரிக்கப்படுவதற்கு முன், தங்களது  நேர்த்திக் கடனைச் செலுத்த, வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹிங்லாஜ் தலத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்து மதத்தின் சைவத்தில் ஒரு பிரிவாக உள்ள நாத் எனும் மதத்தினர், இங்கே ஏராளமானோர் இருந்துள்ளனர். இன்றும் நாத் யோகிகள் பலரை அங்கே காண முடிகிறது. உஜ்ஜைனி ராஜ வம்சத்தைச்  சேர்ந்த ஒருவர் நாத் சம்பிரதாயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. நாத் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களை கான்படா யோகிகள் என்று அழைக்கின்றனர். கான் என்றால்  இந்தியில் காது. படா என்றால் கிழிந்த என்று பொருள். இவர்கள் துறவறம் செல்வதற்கு முன், இவர்களின் இரு காதுகளிலும் ஓர் அங்குல நீளத்தில் நீண்ட துளை இடப்படும். அத்துளையில் வெள்ளித்  தகட்டால் செய்யப்பட்ட வளையங்களை அணிந்த இந்த சந்நியாசிகளை, அங்கே நடக்கும் பெருந் திருவிழாக்களில் கூட்டம் கூட்டமாகக் காணலாம்.

இப்பீடத்தின் கருவறையை அடைய, உயரம் குறைவாகத் தென்படும் குகைவாயில் வழியாக ஊர்ந்துதான் செல்ல வேண்டும். கருவறையில் அம்மனை உருவமாகவோ, அருவமாகவோ வழிபட இயலாது. அன்னைக்காக ஹோமம் நடத்தப்படும்போது, ஹோமத்தின் பூர்ணாஹூதியின் போது எழும் உயர்ந்த ஜுவாலையில், கோடாரீ அன்னையின் திருவுருவம் ஒரு நொடி  நேரத்தில் சிலருக்குத் தென்படும் என்பார்கள். ஆனால், ஹிங்லாஜ் பீடத்துக் குகைக் கருவறையில், வருடம் முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜுவாலையில், அன்னையின் திருவுருவத்தைக்  காணலாம் என்கிறார்கள்.

உலர் பழங்கள், இனிப்புகள், சிந்தூர் குங்குமம், தேங்காய்கள், வளையல்கள், சிவப்பு நிற சுந்தாதி துணிகள், அத்தர் மற்றும் அகர்பத்திகள் ஆகியன தேவிக்கு இங்கு பக்தர்களால் வழங்கப்படுகிறது.

நவராத்திரி நாளில் ஒன்பது நாட்கள் மா ஹிங்லஜை வழிபாடு செய்வதற்கு புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. விழா நான்கு நாட்கள் நீடிக்கும்.மூன்றாவது நாளில், குருக்கள் மந்திரங்களை ஓதி, பக்தர்களால் கொண்டுவரப்படும் பிரசாதம் தெய்வீகத்துக்கு வழங்கப்படும் போது ஒரு பெரிய விழா நடைபெறுகிறது. சில பக்தர்கள் நான்கு நாட்களில் ஹிங்லஜில் இருக்கிறார்கள், மற்றவர்கள் ஒரு குறுகிய நாள் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  வரையிலும்  திறந்து  இருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் : கராச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : நேரடியாக இல்லை.,  பூ பனேஸ்வர்  
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு 

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×