பவிஷ்யபத்ரி





	


	



























	




 




	








 




3:58:46 AM         Monday, February 09, 2026

பவிஷ்யபத்ரி

பவிஷ்யபத்ரி
பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி பவிஷ்யபத்ரி
Product Code: பவிஷ்யபத்ரி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                          பவிஷ்ய பத்ரி 

திருத்தல அமைவிடம்  : இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலையில், உத்தரகாசி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 14640 அடி உயரத்தில் உள்ள கங்கோத்ரி அருகே தபோவனம் அமைந்துள்ளது. தபோவனத்தில் இருந்து கால்நடையாக நடந்தே செல்லும் தூரத்தில் பவிஷ்யா பத்ரி அமைந்துள்ளது. 

புருஷசூக்தம், ரிஷிகேசம் முதலான ஸ்லோகத் தொகுதிகளை இயற்றிய ரிஷி நாராயணன், ஐந்து இடங்களில் தவமிருந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஐந்து ஆசிரமங்களை பஞ்ச பத்ரி என்று அழைக்கிறார்கள். அவை ஆதி பத்ரி, வ்ருத பத்ரி, பவிஷ்ய பத்ரி, யோக பத்ரி, விஷால் பத்ரி என்பனவாகும். பத்ரி திருத்தலங்கள், ரிஷிகேஷ் பத்ரிநாத் மார்க்கத்தில் உள்ளன.

சிறப்புக்கள் : அகத்தியமுனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. அகஸ்தியருக்கு இங்கு ஸ்ரீநாராயணன் தரிசனம் கொடுத்ததாகவும், அப்போது பகவான் தான் கலியுகத்தில் பவிஷ்ய பத்ரியில் கோயில் கொள்ளப் போவதாகவும் கூறினாராம். இனி வருங்காலங்களில் இயற்கை சீற்றத்தால் பக்தர்கள் பத்ரி விஷால் சென்றடைவது இயலாது போகலாம் எனவும், அச்சமயம், பத்ரி நாராயணனை இந்த பவிஷ்ய பத்ரிக்கு எழுந்தருளச் செய்து பூஜை செய்வர் என்றும் சொல்கிறார்கள்.  சுபாயீ கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள பவிஷ்யபத்ரிநாதரை ஆதிசங்கராச்சாரியார் நிறுவி வழிபாடு செய்தாராம்.

இந்த இடம் அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2744 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஐந்து பத்ரிகளில் ஒன்றாகவும் உள்ளது. மோசமாக மாறி வரும் சுற்றுச்சூழலால் எதிர்காலத்தில் பத்ரிநாத் கோவிலை அடைய முடியாது. எனவே, அந்நாட்களில் பத்ரிநாத்திற்குப் பதிலாக பவிஷ்யா பத்ரி வணங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்து கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மரின் உருவம் இந்த கோவிலில் வழிபடப்பட்டு வருகிறது. 

தௌலிகங்கை நதிக்கு செல்லும் வழியில் தபோவனத்தைத் தாண்டி வரும் போது இந்த கோவிலுக்கு வந்து செல்ல முடியும். 11 கிலோமீட்டரில் சால்தார் என்ற இடம் வரை காரில் செல்லலாம். பிறகு 5 கி.மீ மலையேற்றம். ஜோஷிர்மட்  மலாரி பேருந்து தடத்தில் 15 கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து மலைமேல் செல்ல வேண்டும். ஒற்றையடிப் பாதை மிகவும் கரடுமுரடானது. மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து செல்ல வேண்டும். இயலாதவர்கள் வாடகை குதிரை மீதமர்ந்து செல்லலாம். இப்படி 6 கி.மீ. தொலைவைக் கடந்தால் இக்கோயிலை அடையலாம். கோயிலைச் சுற்றிலும் மரங்களும், மலைகளுமாக உள்ளன. இக்கோயில் மிகவும் சிறியது. இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள ஒரு கருப்புப் பாறாங்கல்லில் பகவானின் உருவம் தானே உருவாகி வருகிறது. முழு உருவும் தெரிந்தவுடன், அப்போது பவிஷ்ய பத்ரியில் பத்ரிநாராயணனை தரிசிக்க முடியாதென்றும், இங்குதான் தரிசிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இக்கோயில் பெரும்பாலும் பூட்டியே இருக்கிறது. மலைவழியே சற்றுத் தொலைவு சென்றால் சுபாயி என்னும் கிராமத்தை அடையலாம்.

அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்  

அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ், ஹரித்வார் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×