Heading | கர்மா பதிவு |
Details |
கர்மா பதிவு இது 100 % வியாபார நோக்கம் அல்லாத (Non - Commercial), இறைசார்ந்த அறக்கட்டளை. இதில் பதிவு கட்டணம், வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை. கோயில் அதன் சுற்றுப்புறம் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை மாசுபடாமல் சுத்தமாக பராமரிக்க, உழவாரப்பணி, அமைப்பு, சங்கம், அறக்கட்டளை என பல்வேறு இறை சார்ந்த பெயர்களில் "இறை தொண்டு" செய்யும் அடியார்களை "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! " என்ற ஔவையாரின் வாய்மொழிக்கேற்ப, இறை தொண்டர்களை அடையாளம் காணவும், இறைதொண்டர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், இறைஅற்புதங்களையும் பரிமாறிக்கொள்ளவும், இறைவனின் பெருமைகளை உலகறிய செய்யவும், திருதலத்திற்கு வரும் அடியார்களுக்கு தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய பெருமைகளை கூறி, இறையருள் பெற, அடியார்களுக்கு உதவி செய்யவும் , இலவச தங்கும் சேவையை பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளம். |