Your shopping cart is empty!
குமரி முதல் இமயம் வரை துவாரகை முதல் பூரி வரை இந்தியாவெங்கும் பயணம் செய்த ஆதிசங்கரர் புண்ணியத் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். ஆயிரமாயிரம் தலங்கள் இருப்பினும் அவற்றுள் பத்ரிநாத் பூரி இராமேஸ்வரம் துவாரகை முதலான நான்கையும் உச்ச புனித ஸ்தலங்கள் (ஊயச னுயஅ) இந்த உலகுக்கு அறிவித்தார். அவை நான்கிற்கும் பொதுவான அம்சங்கள் நான்கு 1. உலக நன்மைக்காக தன்னலமற்ற சேவை 2. சைவரால் (ஆதிசங்கரர்) அங்கீகரிக்கப்பட்ட வைணவத் தலங்கள் 3. தேவியரின் துணையின்றி செயல்படுதல் 4. எளிதில் அடையமுடியாத (அந்த காலத்தில்) திருத்தலங்கள். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.