சிவாலய ஓட்டம் - 12




	


	

























	




 




	








 




7:27:47 AM         Thursday, December 05, 2024

சிவாலய ஓட்டம் - 12

சிவராத்திரி சிவனுக்கு உகந்த நாள் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத சிவராத்திரிக்குத் தனிப் பெருமையுண்டு. இந்த நாள் சிவனுக்குகந்த நாளாகக் கருதி எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு மக்களும் இரவு முழுவதும் கண்தூங்காமல் விழித்திருந்து சிவ பூஜைகளில் கலந்து கொள்வதோடு சிவனின் திருநாமங்களைக் கூறிக் கொண்டிருப்பதும் சிவனைத் துதித்து பாடுவதும் தேவார திருவாசகங்களை ஓதுவதும் வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான ஒரு நிகழ்ச்சி நீண்டகாலமாக நடைபெறுகிறது. அதை சிவாலய ஓட்டம் என்று கூறுவர். தருமபுத்திரன்ஒரு யாகம் நடத்தக் கருதி அந்த யாகத்திற்கு மன்னர்களையும் மகரிஷிகளையம் அழைத்தான். எனினும் வியாக்கிரபாத முனிவர் வரவில்லை முனிவர்கள் தவபலத்தை விட புஜபலமே முக்கியமென்று கருதிய பீமனுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன் பீமனிடம் நீ சென்று முனிவரை அழைத்து வா என்று கூறினான். தருமனின் அழைப்பை மதிக்காத வியாக்கிரபாத முனிவரை அழைத்து வர பீமனுக்கு விருப்பமில்லை. எனினும் கிருஷ்ணன் சொல்லைத் தட்ட முடியாத பீமன் முனிவரை கட்டி இழுத்து வர முடிவு செய்தான். வியாக்கிரபாதர் ஒரு புருஷமிருகம். ஒரு மாறுபட்ட மனிதப் பிராணி இடுப்பின் மேலே மனித வடிவமும் கீழே புலியின் வடிவமும் கொண்டவர். சிவபக்திமிக்க இப்புருஷமிருகம் வைணவ சமயத்தை அறவே வெறுத்தது. நியாயத்திற்க்குக் கட்டுப்பட்டது. எனினும் அம்மிருகத்தின் எல்லைக்குள் யாராவது வந்து வைணவ நாமத்தைக் கூறினால் வெறிகொண்டு தாக்கும். அதன் எல்லையை தாண்டிவிட்டால் விட்டுவிடும். கண்ணன் பீமனிடம் புருஷமிருகம் மிக வலிமை வாய்ந்தது. அது வைணவ நாமத்தைக் கேட்டால் சீறிப்பாயும். அவ்வாறு அது உன்னைத் தாக்க வந்தால் அதன் முன்னால் நிற்க முடியது. எனவே நான் 12 சிவ உருவங்களைத் தருகிறேன். ஒன்றை கீழே நீ வைத்துவிட்டால் லிங்கத்தை மிருகம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யும். அதற்குள் நீ ஓடி தப்பிக் கொள்ளலாம் என்று கூறினார். 12 சிவ உருவங்களையும் பெற்றுக் கொண்ட பீமன் வியாக்கிரபாதர் இருக்கும் இடம் நோக்கி சென்றார். புருஷமிருகம் முஞ்சிறையிலுள்ள முனிவீஸ்வரன் பாறையில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்தது. இந்த பாறை தான் இன்று திருமலை என்று அழைக்கப்படுவதோடு 12 சிவாலயங்களின் முதல் கோயிலாக கருதப்படுகிறது. பீமன் புருஷமிருகம் இருக்குமிடத்தை அடைந்து கோவிந்தா கோவிந்தா என்று கூச்சலிட்டான். புருஷமிருகம் கோபமடைந்து பீமனை எட்டிப்பிடித்தது. திணறிய பீமன் தன்னிடமிருந்த சிவலிங்க உருவமொன்றை வைத்தான். மிருகம் அதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தது. அதற்குள் பீமன் தப்பியோடினான். மீண்டும் மிருகம் பீமனைத் துரத்த இரண்டாவது லிங்கத்தை வைத்தான். இவ்விடமே திருக்குறிச்சி. மிருகம் மீண்டும் தன்னைப் பிடிக்க வரும் போது அடுத்த உருவத்தை வைத்தான். இவ்வாறு பீமன் வைத்த 12 உருவங்களுமே 12 சிவாலயங்களாகத் தோன்றியது. பீமன் 12 வது சிவலிங்கத்தை வைத்த இடமே நட்டாலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புருஷ மிருகத்திற்கு சங்கர நாராயணனாக கண்ணன் காட்சியளித்தார். 12 உருவங்களையும் வைத்த பீமன் மீண்டும் ஓடினான். ஆனால் புருஷமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒருகால் எல்லைக்குள்ளும் மறுகால் எல்லைக்கு வெளியேயும் இருந்தது. பீமன் நான் உன் எல்கையை கடந்துவிட்டேன். எனவே என்னை விட்டுவிடு என்று கூறினான். அப்போது அங்குவந்த தருமனிடம் இருவரும் நியாயம் கூறுமாறு வேண்டினர். தருமன் தம்பி என்றும் பாராமல் ஒரு கால் புருஷமிருகத்தின் எல்கையில் இருந்ததால் பாதி உடல் புருஷமிருகத்திற்கே என்று தீர்ப்பு வழங்கினான். இதனைக் கண்டு மகிழ்ந்த புருஷமிருகம் பீமனை விடுவித்ததோடு தருமனுக்கு யாகத்திற்கு உதவியது. என்று கூறுவர். மக்கள் சிவராத்திரி அன்று காலை முதல் தொடங்கி 12 சிவாலயங்களுக்குக் கையில் விசிறியோடு ஓடிச்சென்று அங்கிருக்கும் இறைவனை வழிபடுவது வழக்கம். கோபாலா கோவிந்தா என்று கூறிக்கொண்டே 12 சிவாலயங்களுக்கும் ஓடிச்சென்று வழிபடுகின்றனர். 12 சிவாலயங்கள் எவை என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Refine Search

×
×
×
×
×
×
×