சோமநாதம்





	


	



























	




 




	








 




9:24:57 PM         Thursday, September 12, 2024

சோமநாதம்

சோமநாதம்
சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம் சோமநாதம்
Product Code: சோமநாதம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                 சோமநாதம், ஸ்ரீசோமேஸ்வரர் கோவில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் அமைந்துள்ளது. 

இறைவன் : சோமநாதர், சோமேஸ்வரர் சந்திரசேகரர், சந்திர மவுலீஸ்வரர்

இறைவி :  பார்வதி, சந்திர பாகா 

தீர்த்தம் :  திரிவேணி, கபில, சூரிய சந்திர தீர்த்தம்

சோதிலிங்கம்  என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது.  திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்திய திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.  இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.

தலச் சிறப்புகள் : சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது. காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக 'சோமன்' என்கிற பெயரால் இங்கே சோம நாதர் என்று பெயர் கொண்டார்.

இக்கோயிலில் இருக்கும் சிவ லிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல தனது 127வயதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.  சோமநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதற்கு அருகில் இருக்கும் கடலில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இங்கு நடைபெறும் கார்த்திக் பூர்ணிமா திருவிழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.

தல வரலாறு : தக்ஷனால் சந்திரனுக்கு ஏற் பட்ட சாபத்தை போக்கி, பிறைச்சந்திரனை தன் ஜடையில் சூடினார் சிவபெருமான். இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான சோமநாதர் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்மதேவனின் புதல்வனான தட்சனுக்கு அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு மகள்களும் சந்திரதேவனை மணம் புரிந்து கொள்ள விரும்பினர். தட்சன் இருபத்தேழு புதல்விகளையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். இருபத்தேழு புதல்விகளும் சென்னையிலுள்ள திருவொற்றியூர் என்ற தலத்தில் தியாகேசர் கோயிலில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு நட்சத்திரங்களாகும் பேறு பெற்றனர்.
 
இந்திருக்கோயிலில் இருபத்தெழு நட்சத்திர லிங்க சந்நிதிகள் உள்ளன. இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகினியுடன் மட்டும் அதிக ஆசையுடன் இருந்து மற்றவர்களை உதாசீனப் படுத்தினான். மனைவியர்களிடையே பாரபட்சம் காட்டி அவர்களை துன்பப்படுத்தியதற்காக தேய்ந்து தேய்ந்து அழிந்து போகுமாறு தட்சன் சாபமிட்டான். இதனால் சந்திரனைநோய் பற்றியது. அவன் ஒளி குறைந்து நாளுக்குநாள் தேய்ந்து வரலானான். தேவமருத்துவர்களான அசுவினி குமாரர்களும், தன்வந்திரியும் எவ்வளவு வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. தனது நிலை கண்டு வருத்தம் அடைந்த சந்திரன் பூவுலகை அடைந்தான். சவுராஷ்டிரத்தில் சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை ஆராதனை புரிந்து வழிபட்டான். கயிலைநாதனை நாள்தோறும் நீராடி விரதம் இருந்து பூஜை செய்தான். தேவர்களும் சந்திரனுக்காக சர்வேஸ்வரனைப் பூஜை செய்து சந்திரனை காப்பாற்ற வேண்டினர். ஈசன், சந்திரனின் ஒரு கலையைத் தன் திருமுடியில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு அருள் புரிந்தார். பேரருள் பெற்ற சந்திரன் இழந்த ஒளியை மீண்டும் பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து முழுப்பிரகாசத்தை அடைந்தான். சிவபூஜை புரிந்து உடல்நோய் குணமாகி நலம்பெற்ற சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் வேறு பல தலங்களிலும் பரம்பொருளை வழிபட்டு பூஜை செய்தான். அத்தகைய திருத்தலங்களில் ஒன்று தமிழ்நாட்டிலுள்ள திங்களூர். அப்பூதியடிகளின் இறந்த மகனைத் திருநாவுக்கரசர் மீண்டும் உயிரோடு எழுப்பிக் கொடுத்த தலமாகிய திங்களூரில் சிவபூஜை புரிந்த சந்திரனுக்கு தனி சந்நிதியுள்ளது. கும்பகோணத்தில் வியாழபகவானுகிய பிரகஸ்பதியும், சந்திரனும் வழிபட்டு பூஜை செய்த வியாழ சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகே இத்திருக்கோயில் உள்ளது. எட்டு வகையான திருக்கோவில்களில் சோமநாதம் பெருங்கோவிலாகவும் மணிக்கோவிலாகவும் விளங்குகிறது.
 
கோ‌யி‌ல் அமைப்பு : இராவணன், சோமேஸ்வரர் ஆலயத்தைத் தங்கத்தால் அமைத்துப் பொன்மயமாக்கினான். கிருஷ்ணன் சோமநாதர் ஆலயத்தை வெள்ளியால் புதுப்பித்தான். வெள்ளித் தோரண வாயிலை அமைத்து திருப்பணி செய்தான். இத்திருக்கோவிலானது தங்கமணி, தங்க சங்கிலிகள், தங்க விக்கரங்கள், தங்க தாம்பாளங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றையெல்லாம் கொண்டு மாபெரும் பொன்மணி கோவிலாக திகழ்ந்தது. மிக்க புகழும் பெருமையும் கொண்ட சோமநாதர் ஆலயம் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்த ஆலயம் என்பதை கல்வெட்டு கூறுகின்றது. அகலமான மண்டபங்களையும் வானுயர்ந்த விமானங்களையும் அழகுமிக்க கூரைகளையும் தோரணவாயில் களையும் கொண்டுள்ள சோமநாதர் திருக்கோவில் இராமநாதர் திருக்கோவிலைப் போன்று கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கடலே புனிதத் தீர்த்தமாக விளங்குகின்றது. 

சோம்நாத் கோயில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அண்டார்டிகா கண்டம் வரைக்கும் இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என்று கடற்பாதுகாப்பு சுவரில் உள்ள பான ஸ்தம்பத்தின் கல்வெட்டு கூறுகிறது. சோம்நாத் கோயில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. பேருந்து அல்லது பிற வாகனம் மூலம் ராஜ்கோட் வழியாகவும் சோம்நாத் கோவிலை சென்றடையலாம். குஜராத், அகமதாபாத்தில் இருந்து 425 கி.மீ தூரத்தில்  உள்ளது.

கோவில் காலை 6.00 மணி முதல்  இரவு 9.30 மணி வரையிலும்  திறந்து இருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் : அஹமதாபாத் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  அபு ரோடு  

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×