ஹனுமன் சட்டி
அமைவிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹனுமன் சட்டி யமுநோத்ரிக்கு அருகில் அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், கேதார்நாத்திலிருந்து 219 கி.மீ தொலைவிலும் உள்ள இடம் பாண்டுகேஸ்வர். அருகே 9 கி.மீ தொலைவில் ஹனுமான் சட்டி உள்ளது.
இங்கு யோக தியானத்தில் பத்ரி தென்படுவதாக கூறப்படுகிறது. பாண்டு மகாராஜா சில காலம் இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ ஹனுமான் நிஷ்டையில் அமர்ந்து பத்ரிநாதரை பிரீதி செய்ததாகவும், இந்த இடத்தில் பாண்டவர்கள் ஹனுமானுக்கு பூஜை செய்ததாகவும், அவர்களுக்கு ஹனுமான் காட்சி கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது. ஹனுமானுக்கு தனி கோவில் உள்ளது
ஹனுமன் சட்டி கங்கா மற்றும் யமுனா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. ஹனுமான் சட்டி கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அனுமான் சாட்டி, யமுநோத்ரிக்கு 13 கி.மீ தொலைவில் உள்ளது. தொடக்கத்தில் அனுமான் சாட்டி, யமுநோத்ரிக்கு செல்லும் பனச்சறுக்கின் தொடக்கமாக இருந்து வந்தது. தற்போது அனுமான் சட்டிக்கும் மற்றும் ஜானகி சட்டிக்கும் இடையில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் 7 கி.மீ தூரத்தை குறைத்து ஹனுமன் சட்டி, புதிதாக உருவாக்கப்பட்ட சாலையாகும். ஏராளமான பக்தர்கள் ஹனுமான் சட்டிக்கு மே மாதம் முதல் அக்டோபர் வரை செல்கின்றனர்.
யமுநோத்ரி : புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றின் பெயரிலிருந்து இந்த பகுதி யமுநோத்ரி என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 4421 மீ உயரத்தில் உற்பத்தியாகி பாய்ந்து வரும் சம்பாசர் பனியாற்றிலிருந்து கங்கை ஆறு உற்பத்தியாகி வருகிறது. ஆலயம் 19 ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் மகாராணி குலேரியா அவர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் வாசல்கள் புனித நாளான அக்சய திரியை அன்று திறக்கப்படும். தீபாவளி அன்று வரை கோவில் திறந்து இருக்கும்.
யமுநோத்ரியில் இருக்கும் சுர்யா குண்ட் மற்றும் கௌவுரி குண்ட் ஆகிய சூடான நீரூற்றுகளும் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன. சம்பாசர் பனியாறு யமுநோத்ரி ஆலயத்திற்கு 1 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த பனியாற்றை அடைவது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் இந்த பனியாறு இந்திய சீன எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதியில் இருக்கிறது. யமுநோத்ரி ஆலயத்தை அடைய ஒரு நாள் முழுவதும் பனிச்சறுக்கு மூலம் அடத்தியான காடுகள் வழியாக பயணம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் குதிரைகளை வாடகைக்கு எடுத்து, குதுரைச் சவாரி செய்து யமுநோத்ரி ஆலயத்தை அடையலாம். இந்த ஆலயம் இந்து சமய நதி தேவதையான யமுநோத்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.
ஜானகி சட்டி : யமுநோத்ரிக்கு மிக அருகில் கர்சாலிக் என்ற மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. யமுநோத்ரிக்கு 7 கி.மீ. தொலைவில் ஜானகி சட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், நீரூற்றுகளும் உள்ளன. மற்றும் சிவபெருமானுக்கான ஒரு பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் அழகிய மர வேலைப்பாடுகளாலும், கற்சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
திவ்ய சீலா : யமுநோத்திரி ஆலயத்திற்கு மிக அருகில் திவ்ய சீலா என்று ஒரு புனித கல்லும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புனித கல்லிற்கு தெய்வீக விளக்கு என்று பொருள். இந்த தூண் யமுநோத்ரி மற்றும் சூரியா குன்ட் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்திருக்கிறது. யமுநோத்ரி ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பு இந்த புனிதக் கல்லை பக்கதர்கள் தரிசிப்பது வழக்கம். மேலும் யமுநோத்ரி புனித ஆலயத்திற்கு செல்லுவதற்கு முன்பு பத்கோட் என்ற நகரத்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் தங்குவது உண்டு. இந்த நகரம் தராசு என்ற பகுதியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஆப்பிள் தோட்டங்களால் சூழப்பட்டிருக்கும் இப்பகுதியில் ஏராளமான பிரசித்தி பெற்ற பல இந்து சமய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன.
யோக பத்ரி : ஹனுமான் சட்டியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள பாண்டுகேஸ்வரர் கிராமத்தில் உள்ளது யோகபத்ரி. பாண்டவர்கள் பிறந்த இடம். பாண்டு இறந்த இடம். கர்ணன் பிறந்ததும் குந்த, பாண்டு திருமணம் நடந்ததும் இங்குதானாம். யோக நிலையில் ஆளுயர சாளக்ராம மூர்த்தி. வெண்கலச் சிலையும் உள்ளது. இவற்றை பாண்டு மன்னர் ஸ்தாபித்தாராம். இங்குதான் பத்ரியின் உற்சவ மூர்த்தி குளிர்காலத்தில் வைக்கப்படுகிறார். இதனை தரிசித்தால்தான் பத்ரி யாத்திரை முழுமை அடையும்.
ஏப்ரல் முதல் ஜூலை வரை யமுநோத்ரியில் கோடைகாலம் நிலவுகிறது. மழைக் காலத்தில் இங்கு அதிகமான மழை அளவு இருக்கும். மேலும் குளிர்காலத்தில் இந்த பகுதியில் ம்க அதிகமாகன பனிப்பொழிவு இருக்கும். மே முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆகிய காலத்தில் யமுநோத்ரி பகுதிக்குச் சுற்றூலா செல்லலாம். மேலும் அருகில் இருக்கும் நகரங்களிலிருந்து யமுநோத்ரிக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர்த்து சுற்றுலா பயணிகள் டாக்ஸிகள் மூலம் அனுமன் சட்டிக்குச் சென்று பின் பனிச்சறுக்கு மூலம் யமுநோத்ரிக்குச் செல்ல முடியும்.
டெஹ்ராடூனில் இருந்து யமுநோத்ரி வரை ஹெலிகாப்டர் சேவைகள் உள்ளன. ஹனுமான் சட்டி, ரிஷிகேஷ் மற்றும் டெஹ்ராடூனுடன் கூடிய சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
பயணிக்க உகந்த காலம் : ஏப்ரல் முதல் ஜூலை, செப்டம்பர் முதல் நவம்பர் வரை
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு