சுருளி மலை - தேனி





	


	



























	




 




	








 




11:27:27 AM         Thursday, February 13, 2025

சுருளி மலை - தேனி

சுருளி மலை - தேனி
சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி சுருளி மலை - தேனி
Product Code: சுருளி மலை - தேனி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            சுருளிமலை, சுருளிவேலப்பர் கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ள கோயிலாகும். இதனை நெடுவேள்குன்றம் என்றும் அழைக்கின்றனர்.

மூலவர் : சுருளிவேலப்பர்

உற்சவர் : வேலப்பர்

தீர்த்தம் : சுரபிதீர்த்தம்

தலச் சிறப்புகள் : இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால் சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு பின்னர் மருவி சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலின் விபூதி குகையில் ஈர மண் விபூதியாக மாறுகிறது. இக்கோயிலின் கருவறையில் முருகன், சிவன், திருமால், விநாயகர் ஆகியோர் உள்ளனர். இக்கருவறை குகையாகும். இத்தலத்தின் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்த அற்புதமான தலம் இது. 

வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் “நெடுவேள்குன்றம்” என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனிசிலைகள் உள்ளன. இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமமும் தருகிறார்கள், சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்குப் பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார். 

விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாகக் காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.

தல வரலாறு :  மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமணச் சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், “சுருதி” எனப்பட்ட தீர்த்தம், “சுருளி” என மருவியது. முருகனுக்கும் “சுருளி வேலப்பர்” என்ற பெயர் ஏற்பட்டது. 

இராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க இராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த இராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.

திருக்கயிலாயத்தில் சிவபார்வதிக்குத் திருமணம் நடைபெறும் வேளையில் ஒன்றுகூட, வடக்குப் பகுதி உயர்ந்தும் தெற்குப் பகுதி தாழ்ந்தும் போனதாம். அதை நேர்செய்ய அகத்திய முனிவரிடம் பணித்தருளினார் சிவனார். அதன்பேரில், அகத்தியர் முதலானோர் இங்கு வந்தார்கள். இந்த மலைப் பகுதியில் குகை ஒன்றில் சிவனாரை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டனர். அதில் மகிழ்ந்த சிவனார், அவர்களுக்குத் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினார். அவர்கள் தவம் செய்த குகை, 'கயிலாய குகை’ என்று போற்றப்படுகிறது. கயிலாய குகையின் மேல் உள்ள குன்றில், அழகுறக் கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் கந்தபிரான். இங்கே உள்ள உதக நீரான சுருளி தீர்த்தம், நோய் தீர்க்கும் மாமருந்தெனப் போற்றப்படுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள எந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் என்றாலும், இங்கு வந்து சுருளி தீர்த்தத்தை எடுத்துச் சென்று கும்பாபிஷேகத்தில் பயன்படுத்துவது வழக்கம். போகரின் குரு காலாங்கி சித்தர் பன்னெடுங் காலம் தவம் செய்த பூமி இது. பின்னர் போகரும் இங்கு வந்து, குரு உண்டு பண்ணிய நவபாஷாணங் களைக் கொண்டு, பழநி தண்டாயுதபாணியின் மூல விக்கிரகத்தைத் தயாரித்ததாக 'வாத காவியம்’ எனும் நூலில் கருவூரார் தெரிவித்துள்ளார். சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாம். இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்தனராம். விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகளைக் காண மக்கள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. இந்த குகையை “கைலாச புடவு” என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசனப் பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள். 

இங்கு விபூதிக்குகை, சர்ப்பக்குகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. “ஓம்கார” வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திடப் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும். திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை “குன்றுதோறாடல்” என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.

ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் அருவியில் தீர்த்தமாடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் செய்து வைத்தார். எனவே, ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் இவரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகிறார்கள். 


சித்திரைத் திருவிழா, ஆடி பதினெட்டாம் பெருக்கு, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய நாட்களின்போது, இங்கு வந்து அன்னதானம் வழங்கினால், முன்னோரின் ஆசீர்வாதமும் முருகக் கடவுளின் பேரருளும் கிடைக்கும். மேலும் இங்கு உள்ள  கயிலாச குகைக்கு பெளர்ணமி நாளில்  பாதயாத்திரையாக வந்து தரிசித்தால், சிவனாரின் அருளும் கிட்டும். சுவாமிக்கு விசேஷ அபிசேகங்கள், பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, சுரபி நதியில் நீராடி வணங்க பாவம் நீங்கும். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

காலை 1.00 மணி முதல்  மாலை 4.00  மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை  

அருகிலுள்ள ரயில் நிலையம் :  தேனி, விருதுநகர்  

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×