உச்சிநாதேசுவரர் கோவில், திருநெல்வாயல்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது பிரதான சாலையில் சேருமிடத்தில் பேராம்பட்டு செல்லும் எதிர்ச்சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சுவாமி : உச்சிநாதேசுவரர்
அம்பிகை : கனகாம்பிகை
தீர்த்தம் : கிருபாசமுத்திரம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : இக்கோயிலில் குழைந்தைக்கு முதல் உணவு ஊட்டினால் அவர்களுக்கு காலம் முழுவதும் உணவு பிரச்னை ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும். சிவலிங்கத்தின் பின்புறத்தில் சிவா பார்வதியடன் திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். திருஞானசம்பந்தர் தன்னுடைய திருமணத்திற்காக தன உறவினர்களுடன் சிதம்பரத்தில் இருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் மத்திய நேரம் உச்சி வேலை ஆகிவிட்டதால் பசியின் காரணமாக இவரும் கூட வந்த அனைவரும் சிவபுரியேல் உள்ள இக்கோயிலில் தங்கிவிட்டனர் சம்பந்தர் மற்றும் அவரின் உறவினர்கள் பசியோடு இருப்பதாய் அறிந்து கோயில் உதவியாளர் வடிவில் இறைவன் வந்து அனைவருக்கும் உணவு அளித்தார் அதனாலேயே அவருக்கு உச்சிநாதேசுவரர் என்ற பெயர் பெற்றார். தினந்தோறும் 5 கால பூஜைகள் இவ்வாலயத்தில் திடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன. திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர். சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு