27. திருக்கருப்பறியலூர்





	


	



























	




 




	








 




9:29:39 PM         Thursday, September 12, 2024

27. திருக்கருப்பறியலூர்

27. திருக்கருப்பறியலூர்
27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர் 27. திருக்கருப்பறியலூர்
Product Code: 27. திருக்கருப்பறியலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                       குற்றம் பொறுத்த நாதர் கோவில், திருகருப்பறியலூர்

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி : குற்றம் பொறுத்த நாதர், அபராத க்ஷமேஸ்வரர்

அம்பாள் : கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை

தலமரம் : கொகுடி முல்லை 

தீர்த்தம் : இந்திர தீர்த்தம்

பதிகம்  : திருஞானசம்பந்தர், சுந்தரர்

சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். இந்திரன் தன் வச்சிரஆயுதத்தை இறைவன் மேல் எறிந்ததால் ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தை பொருத்து அருளியதால் இவர் குற்றம் பொறுத்த நாதர். அனுமன் சிவா அபராதத்தை இங்கே வழிபாடு செய்து போக்கி கொண்டார். இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களுக்கும் நன்மை நடக்கும். இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது. இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது.

கோவில் அமைப்பு : இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. பிரகாரத்தில் சீர்காழி கோவில் போன்ற கட்டுமலை அமைப்பு உள்ளது. மிகவும் அபூர்வமான அமைப்பு. கட்டுமலை கோவில் உள்ளே சென்றால் தோணியப்பர் சன்னதி உள்ளது. மர படியேறி மேல சென்றால் சட்டநாதர் சன்னதியை தரிசிக்கிலாம்.உள் மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்பில் அமைந்திருக்கிறது. மூலவர் குற்றம்பொறுத்த நாதர் சுயம்பு லிங்கமாகக் கிழக்கு நோக்கியும், தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்கை மற்றும் பிரம்மா காட்சி தருகின்றனர். விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான்.

சூரிய பகவான் இந்தத் தலத்தை வழிபட்டதால் தலைஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபடப் பல சிவஸ்தலங்களில் சூரியன் வழிபட்டான். அவ்வாறு வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கப் பெறலாம்.

தல வரலாறு :  இந்தத் தலத்திலுள்ள இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். யுத்தத்தில் ராவணனைக் கொன்றார் ராமர். அந்த தோஷத்தை நீக்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்ற அனுமன் வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால், அனுமன்  வரத் தாமதமானது. ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் ராமர் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. இப்படிச் செய்ததால் அனுமனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த அபராதம் நீங்கும் என ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்தான். அவன் முன்னால் சிவன் தோன்றி நீ தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்பாலித்தார். அனுமனும் அவ்வாறே இங்கு வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இந்தத் தலத்தின் வட கிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து, வழிபாடு செய்தார். இன்று, அந்தத் தலம் திருக்குரக்கா என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் கொகுடிக்கோயில் என்ற பெயரும் உண்டு. கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : மயிலாடுதுறை, கும்பகோணம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி :  இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×