50. திருப்பழனம்





	


	



























	




 




	








 




9:31:27 PM         Thursday, September 12, 2024

50. திருப்பழனம்

50. திருப்பழனம்
50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம் 50. திருப்பழனம்
Product Code: 50. திருப்பழனம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     ஆபத்சகாயநாதர் கோவில், திருப்பழனம்

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு  கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில்  உள்ளது.  திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி  :  ஆபத்சகாயநாதர்

அம்பாள்  : பெரியநாயகி

தல விருட்சம்  : வாழை, வில்வம்

தீர்த்தம்  :  மங்கள தீர்த்தம் (அழிந்துவிட்டது), காவிரி

பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் 

சிறப்புக்கள் : தேவாரம் பாடல் பெற்ற  தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும். மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. 
 
கோவில் அமைப்பு: ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அரைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பஙளுடன் விளங்குகிறது.  குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

இது அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். அப்பர் பெருமான் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். 

தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : கும்பகோணம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×