59. திருப்பாற்றுறை





	


	



























	




 




	








 




9:26:28 PM         Thursday, September 12, 2024

59. திருப்பாற்றுறை

59. திருப்பாற்றுறை
59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை 59. திருப்பாற்றுறை
Product Code: 59. திருப்பாற்றுறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          ஆதிமூலநாதர் கோவில், திருபாற்றுறை

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் திருச்சி மாவட்டம், கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது.

சுவாமி  :  ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்

அம்பாள்  :  மோகநாயகி, மேகலாம்பிகை

தல மரம்  : வில்வம்

தீர்த்தம் : கொள்ளிடம்

பதிகம் : திருஞானசம்பந்தர்

சிறப்புக்கள் :  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.

தல வரலாறு : மார்க்கண்டேய மகரிஷி தமது சிவபூஜைக்குப் பால் கிடைக்காத தால் வருந்தி இறைவனை வேண்ட அவனருளால் பால் பொங்கியதாகவும் அதனால் இத்தலம் திருப்பாற்றுறை எனப் பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' என்றும் பெயர் பெற்றது.

அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய திசையில் திருக்கோயில் அமைந்துள்ளது. வாயிலில் அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரம் நகரத்தார் திருப்பணி. கோபுரத்தின் இடப்புறம் விநாயகர். வலப்புறம் தண்டாயுதபாணி சன்னிதிகள். கோபுரத்திற்கு முன்பாக பலிபீடமும் சிறிய நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. கருவறையை உள்ளடக்கிய விமானம் ஒரு தள வேசர விமானமாகும். ஆதிதளத்திற்கு மேலமைந்த பகுதிகள் அனைத்தும் அண்மைக்கால சுதை மற்றும் வண்ணப்பூச்சுக்கு ஆளாகி நிற்கின்றன. ஆதிதளத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படும் நந்தி உருவங்கள் பழமையான சிற்பங்களாகும். விமானத்திற்கு முன்பாக அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்பம் ஆகிய மண்டபங்கள் அமைந்துள்ளன. 

அர்த்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்த்த மண்டப நுழைவாயிலுக்கு மேல் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மகர தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணத்தின் இருபுறங்களிலும் வாய் பிளந்துள்ள மகரங்களினின்றும் பூதங்கள் வெளிப்படுகின்றன. தோரணத்தின் மையப்பகுதியில் ஆலிலையின் மீது படுத்திருக்கும் குழந்தைக் கண்ணனின் திருவுருவம் காணப்படுகிறது. கண்ணனின் இடது கை மேலெழும்பியுள்ளது. மார்பின் குறுக்கே ஸ்வர்ண வைகாக்ஷம் அணிசெய்கிறது.கண்ணனின் இரு புறங்களிலும் சாமரங்களும் தலைக்கு மேல் குடையும் காட்டப்பட்டுள்ளன. வழக்கமாக கண்ட அல்லது வேதி பாதங்களில் குறுஞ்சிற்ப வடிவில் இடம்பெறும் கண்ணனை இங்கு மகரதோரணத்தில் வடித்திருப்பது சிறப்புக்குரியது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள முக மண்டபத்தில் தேவார நால்வர், பாமா ருக்மிணியுடன் வேணுகோபாலர், அதிகார நந்தி, சுயசாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் மற்றும் வணங்கிய திருக்கரங்களுடன் காணப்படும் அரசர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

விக்கிரமச் சோழனது கல்வெட்டுக்கள் இக்கோயிலில் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்கோயிலில் நந்தா விளக்கெரிக்க 15 பசுக்கள் அளித்த செய்தியும் திருவெறும்பூரை அடுத்துள்ள சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்த செய்திகளையும் இம்மன்னன் காலக் கல்வெட்டுக்கள் எடுத்து இயம்புகின்றன. மேலும் இக்கோயிலின் அருகே காக்கு நாயக்கன் மடம், திருநாவுக்கரசு தேவன் மடம் என்கிற மடங்கள் செயல்பட்டதையும் அங்கு மாகேசுவரர்களுக்கு உணவு அளிக்கப்பட்டதையும் திருவானைக்கா திருக்கோயில் மடங்கள் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பல்லவர் காலம் முதல் வழிபாட்டில் இருந்து சோழர் காலம் முழுவதும் சிறப்புற்று விளங்கிய இத்திருக்கோயில், காவிரிப் படுகையில் அமைந்துள்ள சோழர் கற்றளிகளில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் விளங்கி வருவதை அறியலாம்.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம்   : திருவையாறு, தஞ்சாவூர்

பஸ் வசதி   : இல்லை

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×