கைலாஸ் - திபேத்

	


		
 
	
 
5:20:40 PM         Wednesday, December 06, 2023

கைலாஸ் - திபேத்

கைலாஸ் - திபேத்
கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத் கைலாஸ் - திபேத்
Product Code: கைலாஸ் - திபேத்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருக்கயிலம் (கைலாஷ் )    தாட்சாயணி  

திருத்தல அமைவிடம் : சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் டார்ச்சன் 150 கி.மீ  தொலைவில் அமைந்துள்ள  மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. மானசரோவர் - திபெத் பகுதியில் உள்ளது அன்னை தாட்சாயணியின் ஆலயம்.

இறைவன் : அமரேஷ்வர் 
இறைவி:பார்வதி, தாட்சாயணி (துர்கா)
பிறசன்னதிகள்:ரக்தாதேவி,ரேசிகாதேவி,அர்த்தநாரீ, பைரவர், சுப்ரமண்யர் 
பாடல் பாடியவர்கள் : அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் அருணகிரிநாதர்

சிறப்புக்கள் : அன்னையின் உடற்கூறுகளில் வலது உள்ளங்கை விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 43வது  பீடமாக விளங்குகிறது. திபெத்தில் வீற்றிருக்கும்  இறைவன் பனி மலையாக காட்சி அளிக்கிறான். அதிகாலையில் இறைவன் பொன்னிறமாகவும் அதன்பின் வெள்ளி நிறமாகவும் காட்சி அளிக்கிறான். கிரி வலத்தின்போது கௌரி குண்டம் பார்க்கலாம். அம்பாள் குளிக்கு இடம் எனப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 19500 அடி உயரம்.
சுதர்சன சக்கரத்தால் துண்டிக்கப்பட்டு விழுந்த தேவியின் வலது உள்ளங்கை பாகம், மிக வேகமாக வந்து விழுந்ததால் அந்தப் பிரதேசம் தாழ்வடைந்ததோடு அங்கே பெரும் பள்ளம் ஏற்பட்டதாம். பல  யுகங்களுக்கு பிறகு பிரம்மனின் வரவால் இங்கே நீர் நிரம்பி அந்த இடம் அழகாகக் காட்சி அளித்தது. இதுவே பின்னாளில் மானசரோவர் என்று பெயர் பெற்றது.

தல வரலாறு  :  ஒருமுறை அத்ரி மகரிஷி இங்கே தவம் புரிந்தார். அவரின் கடுமையான தவத்துக்கு மனம் இரங்கி அவர் முன் தோன்றினார் ஸ்ரீமந்  நாராயணர். அத்ரி மகரிஷியின் விருப்பப்படி தனது அம்சம் கொண்ட ஒரு குழந்தையை மகாவிஷ்ணு உருவாக்கி, அத்ரி மகரிஷியிடம் அளித்தார். அவரே தத்தாத்ரேயர். தக்க வயதில் நான்கு  வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்று பிற்காலத்தில் பெரும் ரிஷியாகத் திகழ்ந்தார் தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் ஒரு முறை இமயமலையைக் கடக்க முயன்றார். அப்போது, இமயவன் அவர் முன் வணங்கி, "மகரிஷியே தங்கள் வரவால் தன்யனானேன். தத்தாத்ரேயர், "மலையரசனே மங்களம் உண்டாகுக. மந்தரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம் முதலிய மலைகள் எல்லாம்  உன்னைப் போல் பிரமாண்டமாக இல்லை. இருந்தாலும் பக்தர்கள் அங்கே கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அவை எல்லாம் தெய்வங்கள் உறையும் இடங்கள். அது போல், உன்னிடம்  மறைந்துள்ள, அரிய சக்திபெற்ற தலங்களை நேரில் தரிசித்து அதன் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். அதற்காகவே வந்துள்ளேன். உன்னிடம் மறைந்துள்ள அந்தத் தெய்வீக  இடங்களுக்குச் செல்ல எனக்கு வழிகாட்டு என்றார். அவரது வேண்டுகோளுக்கு மகிழ்ந்த இமயவன் முதலில் கயிலைநாதனை அவர் தரிசிக்க வழிகாட்டினான். அதன்பின் இருவரும் மானசரோவரை  அடைந்தனர். அதன் மகிமையை இமயவன் எடுத்துக் கூறினான்.

பிரம்மாவின் புத்திரர் மரீசி ஒருமுறை கயிலையில் பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்ய வந்தார். அங்கு முன்பே வசித்துவந்த ரிஷிகள், யோகிகள் உதவியுடன் சிவனை திருப்தி செய்ய, 12 ஆண்டுகள்  முறைப்படி ஆராதிக்க அனைவரும் திட்டமிட்டனர். குளிர்காலம் வந்தது. கயிலையிலிருந்த நீர் முழுவதும் பனிக்கட்டி ஆனதால் அவர்கள் நீராடவும் பூஜைகள் செய்வதற்கும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட  எங்கும் கிடைக்கவில்லை. நீராடி ஈர உடைகளோடு வழிபாடு தொடங்க வேண்டும் என்ற நியமம் இருந்ததால், தண்ணீருக்காக அனைவரும் தவித்தனர். இந்த இக்கட்டான நேரத்தில் மரீசிக்கு தன் தந்தையின் நினைவு வந்தது. நான்முகனை அவர் பிரார்த்தித்தார். நான்முகன் அவர்கள் முன் தோன்ற, தங்கள் தண்ணீர்க் கஷ்டத்தைக் கூறி வழிகாட்டுமாறு  அவர்கள் கோரினர்.

பிரம்மன், கயிலை நாதனைப் பிரார்த்திக்க, பனிக்கட்டி உருகி, ஆறாகப் பெருகி, தாட்சாயணி தேவியின் அங்கம் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் நிரம்பி அழகிய ஏரியானது. இந்த ஏரி  மானசரோவர் எனப் பெயர் பெற்றது. 

கோவில் அமைப்பு : இதன் அருகே ராட்சத ஏரியும் உள்ளது. இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.
இந்த ஏரியின்  நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர். இவ் ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் கைலாச- மானசரோவர் யாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் புனித நீராடி மகிழ்கின்றனர்.

அருகில் உள்ள விமான நிலையம் :  லக்னோ 437 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  லக்னோ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு 

உணவு வசதி : உண்டு

உகந்த காலம் : ஜூன் முதல் அக்டோபர் வரை 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×