ஸ்ரீ சைலம் - ஆந்திரா

	


		
 
	
 
5:12:10 PM         Wednesday, December 06, 2023

ஸ்ரீ சைலம் - ஆந்திரா

ஸ்ரீ சைலம் - ஆந்திரா
ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா ஸ்ரீ சைலம் - ஆந்திரா
Product Code: ஸ்ரீ சைலம் - ஆந்திரா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஸ்ரீசைலம்- ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ  சைலம் பேருந்து நிலத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார்.
மூலவர் : மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்.]
அம்மன்/தாயார் : பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம் : மருதமரம்
தீர்த்தம் : பாலாநதி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பீடம் : ஸ்ரீ  சைல, மாதவி பீடம்

தல சிறப்பு:  அன்னை பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது. தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது. 
கோயில் அமைப்பு: கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.
இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள நந்தி கர்ஜனை செய்யும் போது கலி யுகம் முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது. தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.

தல பெருமை: பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும். மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,""தந்தையே! கலங்காதீர்கள் நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் மதியம் 3.00 வரையிலும்  மாலை 5.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு.
அருகிலுள்ள விமான நிலையம் : ஹைதராபாத் 156 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பும்  60 கி.மீ
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×