மைசூர் சாமூண்டீஸ்வரி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில், சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
தல சிறப்பு: தேவியின் முடி விழுந்த இடம்.உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறார். கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்திசிலையும், எதிர் வரிசையில் மஹிசாசுரன் சிலையும் உள்ளது. 5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது விசேஷமாகும்.
கோயில் அமைப்பு : சாமுண்டிக் கோயில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால்கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. .
கோபுரம் நாற்கர வடிவில் கட்டப்பட்டது. ராஜகோபுரம் ஏழு தங்க கலசங்களை கொண்டது. பிரதான வாயில், நுழை வாயில் நவரங்க மண்டபம், கருவறை, பிரகாரம் கொண்டது. கோபுர நுழை வாயிலில் சிறிய விநாயகர் உள்ளது. கோயில் எதிரில் அசுர வம்ச மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது. இந்த தெய்வம் உடையார் ராஜ வம்சத்தினரின் குல தெய்வமாகும். 11 ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட இந்த கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுப்பிக்க பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் ஹனுமானுக்குமான ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது.
தல புராணம் : தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்ற பெயரில் இருந்தது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனின் தவத்திற்குமெச்சிய சிவன், நேரில் வந்து காட்சி கொடுத்ததுடன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். சிவனை அடிபணிந்த மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அவனின் வேண்டுதலை ஏற்று சாகாவரத்தை சிவன் வழங்கினார்.
சிவனிடம் வரம் பெற்றம ஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையை தாங்க முடியாமல், மக்கள் தேவர்களிடம் முறையிட்டனர். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சிவனிடம் சென்ற தேவர்கள், நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். அவனுக்கு கொடுத்த வரத்தை திரும்ப பெறுங்கள் அல்லது அவனை அழிக்க மாற்று வழி சொல்லுங்கள் என்று முறையிட்டனர்.
தேவர்களிடம் பேசிய சிவபெருமான், நான் வரம் கொடுக்க மட்டுமே பிறந்தவன். கொடுத்தவரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதே சமயம் என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன். அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும் என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண்பக்தர்கள் பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்க தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரனின் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் பிறந்தாள்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 7.30 மணி முதல் மதியம் 2.00 வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மைசூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மைசூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு