சரஸ்வதி





	


	



























	




 




	








 




4:15:42 AM         Saturday, May 16, 2026

சரஸ்வதி

சரஸ்வதி
சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி
Product Code: சரஸ்வதி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பிறப்பிடம் : இமயமலையின் ஷிவாலிக் என்ற இடத்தில் பிறந்து, அரியானா, ராஜஸ்தான் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ கி.மு.6000 முதல் 3000 ஆண்டுகளில் சரஸ்வதி ஆறு பாய்ந்தோடியதை வேதங்கள் வாயிலாக நன்கு அறிய முடிகிறது என்றும், இமயமலையின் கைலாயத்தின் கீழ் மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாய்ந்ததாக அறியமுடிகிறது.

இராஜஸ்தான் மாநிலத்தில் ஆர வல்லி மலைத்தொடரில் தோன்றி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் ஆற்றின் பெயர் சரஸ்வதியாகும். சித்பூர் மற்றும் பதான் வழியாகப் பாய்ந்து கட்சு வளைகுடாவில் இறுதியாகக் கலக்கிறது. வங்கதேசத்தில் ஓடும் ஹூக்லி ஆற்றின் கிளை ஆறு ஒன்று 1900ஆம் ஆண்டு கணக்கில் வறண்டு விட்டது. இமயத்தின் பிளாக்சா வழியாகப் பாயும் சரஸ்வதி, பின்னர் மேற்கில் கேதாராவில் திரும்பி நிலத்திற்கு அடியில் பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

சரஸ்வதி நதியானது சட்லெஜ் மற்றும் யமுனை நதிகளைத் தனது உபநதிகளாகக் கொண்டிருந்தது என்றும், புவியியல் மாற்றங்கள் காரணமாக சட்லெஜ் நதி சிந்து நதியை நோக்கியும், யமுனை கங்கையை நோக்கியும் திசை மாறியதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. சரஸ்வதி நதியானது 1500 மைல் நீளத்திற்குப் பாய்ந்தோடி, கட்ச் பகுதியில் கடலில் கலந்தது என்பது புராணங்கள் அறிவிக்கும் உண்மை. இவ்வாறு சரஸ்வதி ஓடிய பகுதியில்தான் இன்று தார் பாலைவனம் உள்ளது.

மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது.

வேதங்களில் சரஸ்வதி ஆறு குறித்து பல இடங்களில் உள்ளது, ஆனால் எந்த ஒரு இடத் திலும் சரஸ்வதி எங்கிருந்து தோன்று கிறது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் பார்ப்பனர்கள் கூறும் சரஸ்வதி நதியின் தோன்றும் இடமாகக் கருதப் படும் அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் எந்த ஒரு மலையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புராணவரலாறு : சந்திரனுக்குப் பத்ரை என்று ஒரு மகள் இருந்தாள். சந்திரன் மகள் என்றால், அழகுக்குக் கேட்கவும் வேண்டுமா என்ன!. அந்த அழகு பதுமைக்கு மணம் முடித்து வைக்க முடிவு செய்தான் சந்திரன். அதன்படி உசத்யர் என்ற முனிவருக்கு தன் மகளை மணம் முடித்து வைப்பது என்று முடிவு செய்தான். சந்திரனின் மகளை மணம் முடித்துக் கொள்ள உசத்யரும் ஒப்புக் கொண்டு விட்டார். அதைத் தொடர்ந்து ஒரு நல்ல நாளில் உசத்யர்- பத்ரை திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தேவர்களில் ஒருவனான வருணன், பத்ரையின் மேல் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு கண் இருந்து வந்தது. ஒருதலையாகப் பத்ரையை விரும்பி வந்திருந்த வருணனுக்கு, அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி பேரிடியைப் போல் இறங்கியது. அந்த கலக்கத்தில் அவன் தவறான பாதையில் செல்லத் தொடங்கினான். என்ன நடந்தாலும் சரி.. பத்ரையைத் தனதாக்கிக் கொள்வது' என்று முடிவு செய்துகொண்டான். யாருக்கும் தெரியாமல் பத்ரையைக் கடத்திக் கொண்டு வந்து தன்னுடன் வைத்துக் கொண்டான். ஆனால் ஒருவருக்கு, வருணன் செய்த காரியம் தெரிந்திருந்தது. அவர் வேறு யாருமல்ல.. ஈரேழு உலகங்களையும் சுற்றி வருபவரும், நடந்ததையும், நடப்பதையும், நடக்கப்போவதையும் அறிந்தவருமான ஞானவடிவான நாரத முனிவர்தான். அவர் தனக்குத் தெரிந்த அந்த விஷயத்தை நேராக உசத்யரிடமே போய்ச் சொன்னார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், உசத்யருக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. வருணனுக்குப் புத்தி சொல்லி, தன் மனைவியை திருப்பி அனுப்பிவிடும்படி கூறுமாறு நாரதரிடம் வேண்டிக் கொண்டார் உசத்யர். அவரது வேண்டுகோளை ஏற்ற நாரதர், வருணனைச் சந்தித்து உசத்யர் கூறியதை எடுத்துச் சொன்னார். ஆனால் பெண்பித்துப் பிடித்திருந்த வருணன் கேட்பதாக இல்லை.

வருத்தத்துடன் உசத்யரிடம் திரும்பி வந்த நாரதர், வருணனின் பிடிவாதத்தைப் பற்றி கூறினார். உசத்யரின் கோபம் மேலும் அதிகமாகி எரிமலை போல் வெடித்தது.  அவர் உடனடியாக தன் தவ வலிமையைக் கொண்டு, பூமி யிலுள்ள ஏரிகளையும், மற்ற நீர்நிலைகளையும் வற்றச் செய்தார்.  தண்ணீர்ப் பஞ்சம் வந்ததும், அதனால் கஷ்டப்பட்ட முனிவர்கள் உள்படப் பலரும் வருணனிடம் உசத்யரின் மனைவியை விட்டுவிடச் சொல்லி வேண்டினார்கள். ஆனால் அவனோ கேட்பதாக இல்லை.

இறுதியில் உசத்யர், சரஸ்வதி நதியைப் பார்த்து, 'ஏ சரஸ்வதியே! இன்றிலிருந்து இந்தப் பூமியின் மேல் ஓடாமல் மறைந்து போ!' என்று உத்தரவிட்டார். உசத்யரின் வேண்டுகோளை ஏற்ற சரஸ்வதி நதி, பூமிக்கடியில் ஒளிந்து ஓடத் தொடங்கியது. பூமியின் பஞ்சம் இப்போது மேலும் தீவிரமடையவே, வருணனின் மீதான அழுத்தம் அதிகமானது. வேறு வழியின்றி வருணனும் உசத்யரின் மனைவியான பத்ரையை விடுவித்தான். கோபம் தணிந்த உசத்யரின் கருணையால், பஞ்சமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், மறைந்து போன சரஸ்வதி நதி, அதன் பின்பு மீண்டும் பூமியின் மேல் ஓடியதாகவே தெரியவில்லை.

சிறப்புகள் : மகாபாரதத்தில் சரஸ்வதி ஆறு வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. குருசேத்திரப் போர் பற்றி உள்ள கதைப் பகுதியில் வறண்டுபோன சரஸ்வதியின் எல்லையிலிருந்து என்று ஆரம்பிக் கிறது. அதே நேரத்தில் ரிக் வேதத்தில் காணப்படும் சரஸ்வதி ஆற்றின் குறிப்புகள் அனைத்தும் ஈரானில் உள்ள ஹெல்மாண்ட் ஆற்றைப் பற்றியதாகும்.

கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ என்றழைக்கப்படுகிறது. திரிவேணி என்றால் மூன்று என்று பொருள். அப்படியானால் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தவிர வேறொரு நதியும் அங்கு சங்கமமாகி இருந்தால் மட்டுமே அது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அது தற்போது காணாமல் மறைந்து போயிருக்கும் சரஸ்வதி நதி என்றே நம்பப்படுகிறது.

சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதிக்கரையில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னதாகவே நாகரீகம் தழைத்தோங்கி இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யஜூர் வேதத்திலும் சரஸ்வதி நதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதியை நோக்கி ஐந்து நதிகள் பாய்வதாகவும், பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புகளோடு கூடிய சரஸ்வதி நதியாக அவை ஆகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்ட  ஆறுகளில் ஒன்றாகும்.  பிற்கால வேத நூல்களான தாண்டய மற்றும் ஜைமினிய பிராமாணாஸ் போன்றவையும், அதே போல மகா பாரதமும் சரஸ்வதி ஆறு பாலை வனத்தில் வறண்டு விட்டதாகக் குறிப் பிடுகின்றன. சரஸ்வதி என்றால் நீர்நிறைந்த பூஞ் சோலை என்று பெயர். சமஸ்கிருதத்தில் குட்டை, குளம் எனும் பொருளிலும்,  உள்ள பெண் பால் சொல்லாகும்.

இந்நதிக் கரையில் வாழ்ந்த மக்கள் இதன் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும், நிலநடுக்கம் கார்ஸ்ணமாகவும் இதற்கு நீரைத் தரும் ஆறுகள் வேறுவேறு திசைகளில் திரும்பியதாலும் நாளடைவில் நதி வற்றிச் சுருங்கிவிட்டதாக அப்புத்தகம் தெரிவிக்கிறது.

பண்டையகால தட்பவெப்ப நிலையை ஆய்வு செய்ததில், ஹாரப்பா நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு வறண்ட ஊழல் நிலை நிலவியது என்று ஏழு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஏழு ஆய்வுகள் வேறு விதமாகத் தெரிவிக்கின்றன. அதாவது, அதே காலகட்டத்தில் அந்தப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததெனக் கூறுகின்றன.

ஆக, அதிக வறட்சியோ அல்லது அதிக மழைப் பொழிவோ அங்கு ஏற்பட்டு சர்வ நாசம் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரஸ்வதி நதி மறைந்து போயிருக்கலாம் என்ற கூற்றில் உண்மை இருப்பதாக மிஷல் தனினோ அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரோ நடத்திய ஆய்வுகளும் சரஸ்வதி நதி இருந்திருப்பதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. அந்தப் பகுதியில் தொன்மை காலத்திய நதிப்படுகைகள் இருக்கின்றன என்றும், அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறது இஸ்ரோ.

ஆய்வுகளும் வேதங்களும் சரஸ்வதி நதி பற்றிக் கூறினாலும், அது பூமிக்கடியில் தற்போது பாய்ந்தோடிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டாலும் இவை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே சரஸ்வதி நதி குறித்த மர்மம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

பயண விபரம்: ஷிவாலிக் 

விமான நிலையம் : அஹமதாபாத் ( 13  கி.மீ )

ரயில் நிலையம் : ஹரித்வார்,  ( 10 கி.மீ )      

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×