அமைவிடம் : இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில்சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ராமர் பிறந்த இடம் “ ராம ஜென்மபூமி” அயோத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள புனித ஆறானசரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஆன்மிகச் சிறப்பு : அயோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக கருதுகின்றனர். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் சரயு ஆற்றின் கரையில் ஷியா, "ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து காலண்டு படி தீர்த்த யுகத்தில் 9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக நம்பப்படுகிறது.
புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம் தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர், ""இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், ""ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி) மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.
பெருமை : அயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர் பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி.
அயோத்தி பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில் மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும். அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், ""வால்மீகியின் கூற்றுப்படி அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது.
சரயூ நதி அயோத்தியில் இருந்து 23 கிலோ மீட்டர் ஆகும்.ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும். அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
வரலாறு : ஒரு சமயம் தேவர்கள், வசிஷ்ட முனிவரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரை நோக்கி 'சத்ர யாகம்' என்றொரு யாகத்தைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் யாகம் செய்துகொண்டிருந்த இடத்தில் வைகானசம் என்றொரு தடாகம் இருந்தது. நெடுங்காலமாக செய்து வந்த தவத்தின் காரணமாக, தேவர்கள் அனைவரும் உடல் மெலிந்து போய் இருந்தனர். இதுதான் சமயம் என்று தீர்மானித்த அசுரர்கள், தேவர்களை அழித்துவிட எண்ணி போரில் இறங்கினார்கள். தேவர்களும் வேறு வழியின்றி போரில் இறங்க வேண்டியதாயிற்று. போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அசுரர்கள் எண்ணிக்கைக் குறைந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் ஒரு ரகசியமான வழியால், தங்கள் எண்ணிக்கையைப் பாதுகாத்து வைத்திருந்தனர். அங்கிருந்த வைகானசத் தடாகத்தில் இறந்த அசுரர்கள் விழுந்தால், அவர்கள் மீண்டெழுவார்கள். அந்த சூட்சுமம் தெரிந்த அசுரர்கள், அதன் மூலம் மீண்டும் மீண்டும் வந்து தேவர்களைத் துவம்சம் செய்து கொண்டிருந்தனர்.
நொந்து போன தேவர்கள் இந்திரன் தலைமையில் வசிஷ்டரைத் தியானிக்க, வசிஷ்டரும் அங்கு தோன்றினார். அமைதியே உருவான வசிஷ்டருக்கு, அசுரர் களின் இந்தச் செய்கையினால் கோபம் தலைக்கேறியது. வைகானசத் தீர்த்தத்தின் கரைக்கு வந்த வசிஷ்டர், தன் சக்தியைக் கொண்டு அசுரர்களை எரித்துச் சாம்பலாக்கினார். அந்த இடமே மயானம் போல ஆனது.
அப்போதும் அந்த வைகானசத் தீர்த்தத்தின் மேல், வசிஷ்டரின் கோபம் அடங்கவில்லை. உடனே கங்கை நதியை வரவழைத்தார். அதை, முழு சக்தியுடன் அந்த வைகானசத் தடாகத்தில் விழும்படிச் செய்தார். கங்கையின் வேகத்தையும், பலத்தையும் தாங்க முடியாத அந்தத் தடாகம் உடைந்தது.
உடைந்த அந்தத் தடாகத்திலிருந்து புதியதாக ஒரு நதி பிறப்பெடுத்து தனியாக ஓடத்தொடங்கியது. அந்த நதியே சரயு!. 'காக்ரா நதி' என்ற பெயரில் இன்றைக்கும் கங்கை நதியின் ஒரு பிரிவாக சரயு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நதி தன்னை நம்பி இருக்கும் மக்களை வாழ்வித்துக் கொண்டும் இருக்கிறது.
பயண விபரம் : அயோத்திக்கு
விமான நிலையம் : லக்னோ ( 140 கி.மீ )
ரயில் நிலையம் : Faizabad ( 8 கி.மீ )
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு