கிருஷ்ணா





	


	



























	




 




	








 




10:00:03 PM         Friday, May 15, 2026

கிருஷ்ணா

கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
Product Code: கிருஷ்ணா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


பிறப்பிடம்:  இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில்ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும்ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள மகாபலேஷ்வர் என்ற இடத்தில் தொடங்கும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஹேமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. விஜயவாடாஇவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடங்கி மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1300கி.மீ. பயணித்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

ஆன்மிகச் சிறப்பு :  மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகிய மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில், பழமையான மகாதேவர் கோயில் உள்ளது. இங்குள்ள புனிதமான பசுவின் முகத்திலிருந்து கிருஷ்ணா, கோய்னா, வென்னா, சாவித்ரி, காயத்ரி என்ற ஐந்து ஆறுகளும் உற்பத்தி ஆகின்றன. எனவே இங்குள்ள தேவிக்கு பஞ்சகங்கா தேவி என்ற பெயர்! இந்த இடம் அரபிக்கடல் பகுதியிலிருந்து சுமார் 64கி.மீ. தூரத்தில் உள்ளது.

பஞ்ச கங்கா என அழைக்கப்படும் இவ்வைந்து நதிகளில் "சாவித்ரி நதி' மட்டும் மலையின் மேற்குச் சரிவு வழியாக 100கி.மீ தூரம் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. "காயத்ரி நதி' மெல்லிய நீரோட்டத்துடன் மஹாபலேஷ்வரிலேயே கிருஷ்ணாவுடன் சேர்ந்து விடுகிறது. வென்னா நதி கிழக்கு நோக்கி 130கி.மீ. தூரம் பயணம் செய்து சதாரா மாவட்டத்தில் "சங்கம் மஹூலி' என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் சேர்கிறது. "கோய்னா நதி' சுமார் 130கி.மீ. தூரம் ஓடி "காரட்' என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. "பிரீத்தி சங்கமம்' என்றும் இந்த இடம் வழங்கப்படுகிறது.

இந்நதியின் வலது கரைப் பக்கங்களில்(தென்பகுதி) வென்னா, கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, தூத்கங்கா, கடப்பிரபா, மலப்பிரபா மற்றும் துங்கபத்திரா நதிகள் இணைகிறது. இந்நதியின் இடப்பக்கங்களில்(வடபகுதி) பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, ஏர்லா, முன்னேரு, பலேரு ஆகிய துணை நதிகள் சேர்கின்றன.

"பீமா' நதிதான் கிருஷ்ணாவின் துணையாறுகளில் மிகப் பெரியது. 861கி.மீ நீளமுள்ளது. மஹாராஷ்ட்ராவின் "பீம்சங்கர்' மலையில் தோன்றி கர்நாடகா வழியாக ஆந்திராவிற்குள் வந்து கிருஷ்ணாவுடன் இணைகிறது. முசி ஆறு ஹைதராபாத் நகரத்திற்கு நடுவில் இரண்டாகப் பிரிந்து செல்வது இந்நதிதான். "அனந்தகிரி' மலையில் தோன்றி 240கி.மீ தூரம் சென்று கிருஷ்ணாவுடன் சேர்கிறது.

கிருஷ்ணா நதிக்கரையெங்கிலும், மற்றும் துணையாறுகள் கலக்கும் இடங்களிலும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. மஹாபலேஷ்வர் கோயில், வாஸ்னா நதி இணையும் சங்கமேஸ்வரர், பஞ்சகங்கா நதி கலக்கும் நர்சோபவாடி, ஜோதிர்லிங்க ஸ்தலமான ஸ்ரீசைலம், துங்கபத்ரா சேரும் சங்கமேஸ்வரம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.  மற்றும் தத்தாத்ரேயர் சிலகாலம் தங்கியிருந்த மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒüடும்பர் என்ற இடமும் மிகவும் புனிதமாக வணங்கப்படுகிறது. 

ஸ்ரீசைலம் : இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில்கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கிமீ தெற்கில்கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில்சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்)பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரதும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. 

மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும், 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது.. அம்மனின் சக்தி பீடங்களில் இது சைல பீடம் கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கி உள்ளது நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது. ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் 
ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன.

 தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப்படுகிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.
ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், “உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்…’ என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, “சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!’ என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார். சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த்தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.
பிரதேஷசத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.
முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குருக்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.
நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன.

காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு.

பயண விபரம்:  மகாபலேஷ்வர்க்கு

விமான நிலையம் :  பூனே ( 120 கி.மீ )

ரயில் நிலையம் :  சதாரா  ( 60 கி.மீ )     

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×