அத்தாணி





	


	



























	




 




	








 




4:21:15 PM         Wednesday, April 22, 2026

அத்தாணி

அத்தாணி
அத்தாணி அத்தாணி அத்தாணி அத்தாணி அத்தாணி அத்தாணி அத்தாணி அத்தாணி
Product Code: அத்தாணி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          அத்தாணி, சந்திரசேகரர் 

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு  மாவட்டத்தின் அத்தாணி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 

இறைவன் : சந்திரசேகரர்
இறைவி  : ஆனந்தவல்லி

தல சிறப்புகள் :  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகருக்கு முன்புறம் உள்ள லிங்கத்தை சுற்றி ஐந்து தலையுடைய நாகம் உள்ளது. இவ்வாறு இருப்பதால் இத்தலம் சர்ப்பதோஷ நிவர்த்தி தலமாக உள்ளது. சந்திரசேகர் ஆனந்தவல்லியுடன் காட்சி தருவதால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறுகிறது. திருச்சுற்றில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சந்திரசேகரருக்கு முன் உள்ள லிங்கத்திருமேனியைச் சுற்றி ஐந்து தலையுடைய நாகம் உள்ளது. 

தல வரலாறு : அத்தாணி ஒரு காலத்தில் அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. சடையப்பர் என்ற விவசாயி மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம். ஒருநாள் புலி ஒன்று பசுவை கடுமையாக தாக்கியது. சடையப்பர் புலியுடன் சண்டை போட்டு விரட்டினார். இருப்பினும் காயமடைந்தார். வெகுநேரமாகியும் சடையப்பரும், பசுவும் வராததால் இவர்களைத் தேடி ஊரார் காட்டுக்கு புறப்பட்டனர். பசு அவரை சுமந்து கொண்டு, இப்போது கோயில் இருக்கும் இடத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இது கண்ட பசுவும் இறந்தது. ஊரார் மனம் வருந்தினர். பசு இறந்த இடத்தில் ஒரு மேடை கட்டி நந்தியை வைத்தனர். பிறகு அருகிலுள்ள ஓடையில் இருந்து ஒரு மூர்த்தியை எடுத்து வந்து அதை சுயம்பு மூர்த்தியாக பிரதிஷ்டை செய்து மாதேஸ்வரன் கோயில் என்று திருநாமம் சூட்டினர். இந்தக் கோயிலே சடையப்பர் கோயில் என்றும் வழங்கலாயிற்று.

இப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் தவறான வழியில் சென்றனர். இதற்காகவே ஈசன், புலிவடிவில் வந்து சடையப்பரைக் கொன்று மற்றவர்களை ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஈசன் இந்த தண்டனையை அளித்ததாக ஊரார் கருதினர். எனவே, ஈசனை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தனர். அதன்படி ஈசனின் அவதாரமாகிய சந்திரசேகர மூர்த்தியை உருவாக்கி, கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் சந்திரசேகர மூர்த்திக்கு இடப்பக்கம் ஆனந்தவல்லி அம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதோஷம் சிறப்பாக நடக்கிறது. விவசாயத்தில் லாபம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு மேன்மையை சந்திரசேகரர் தருகிறார். சிவராத்திரி, மார்கழி திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. தடைபட்ட திருமணங்கள் நிறைவேறவும், விவசாயத்தில் லாபம், கால்நடை வளர்ப்பவர்கள் மேன்மை வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×