குமரலிங்கம், காசி விஸ்வநாதர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் எனும் பகுதியில் உள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல தீர்த்தம் : அமராவதி
தல விருட்சம் : நாகலிங்க மரம்
தல சிறப்புகள் : அதிகார நந்தி வாசலிலும், அனுகிரக நந்தி மகா மண்டபத்திலும் காணப்படும். அனால் இங்கு சற்று வித்தியாசமாக இரு நந்தியும் மகா மண்டப வாசலில் முன்னே உள்ளது. மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி அமராவதி ஆற்றை நோக்கி உள்ளார்.
கோவில் அமைப்பு : 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில். கோவில் கிழக்கு வாயிலுடன் உள்ளது. யானை வாயில் பிரதான வாயில் தெற்கு நோக்கி உள்ளது. விசாலாட்சி அம்மன் தெற்கு நோக்கி உள்ளது. அம்மனை வழிபட தொழில் வளம், திருமண தடை நீங்க அருள்புரிகிறாள்.சுந்தர கணபதி, சனீஸ்வரர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேதராக முருகன், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா வேணுகோபால், கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் தனி சன்னதி கொண்டு வெளிப்பிரகாரத்தில் உள்ளனர். கோவிலின் வட மேற்கு மூலையில் நாகலிங்க மரம் உள்ளது.
தல வரலாறு : பழனி மலைகளில் முதிர மலை ஓன்று உள்ளது. குறுநில மன்னனா குமணன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். பழனிக்கும் உடுமலைக்கும் உள்ள பகுதி குமண மங்களம் என்று அழைக்கப்பட்டது. மன்னன் காசி யாத்திரை செல்லும் போது தன்னுடன் வர விருப்பம் உடையவர்களையும் அழைத்து செல்வார். எனக்கு பிறகு யாரு இம்மக்களை அழைத்து செல்வார்கள் என நினைத்த மன்னன் காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து கோவிலை கட்டினார். காசி போன்ற அமைப்பை கட்ட நினைத்து பல இடங்களை ஆய்வு செய்தார். இதில் தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை தேர்வு செய்தார். காசியில் இருந்து கொண்டு வர பட்ட லிங்கத்தை நிறுவி, விசாலாட்சி சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. குமணன் காசிலிருந்து லிங்கத்தை கொண்டுவந்ததால் இப்பகுதி குமாரலிங்கம் என்று தற்போது காலப்போக்கில் கொமரலிங்கம் என்று அழைக்கப்படுகிது.
பிரதோஷ காலத்தில் இரு நந்திகளுக்கும் ஒரு சேர நடைபெறுகிறது. சனீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளார். திருநள்ளாறு சன்னதியை ஒத்து இருப்பதால் அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பரிகார பூஜை செய்கின்றனர். நவக்கிரகளுக்கு தனி தனி சன்னதிஇல்லை. மேலும் சைணவர்களும், வைணவர்களும் எவ்வித பேதம் இன்றி இருந்தார்கள் என்பதற்கு ருக்மணி சத்தியபாம சமேத வேணுகோபால் சன்னதி உள்ளது. திருவாதிரை திருவிழா, மாசி மாத சிவராத்திரி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை