நல்லூர், விஸ்வேஸ்வர ஸ்வாமி
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : விஸ்வேஸ்வர ஸ்வாமி
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள பைரவர் விசேஷமானவர். இந்த பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. பைரவரின் இடது மற்றும் வலது காதுகளில் புணுகு சாத்தி வழிபாடு செய்தால், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவிலினுள் பட்டி விநாயகர், சுப்பிரமணியர்,நந்திதேவி, கங்காதேவி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், சரபேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. இங்குள்ள சரபேஸ்வரை தொடர்ந்து 24 நாட்கள் வழிபட பில்லி சூன்யம் ஏவல்கள் அனைத்தும் விலகி ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது. மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை நடைபெறுகிறது. சுந்தரபாண்டியன் எனும் மன்னன் கட்டிய இக்கோவில் சுந்தரபாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டதாக சொல்கின்றனர். திருவாதிரை திருவிழா, மாசி மாத சிவராத்திரி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை