சாமளாபுரம்





	


	



























	




 




	








 




2:46:24 PM         Friday, May 01, 2026

சாமளாபுரம்

சாமளாபுரம்
சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம் சாமளாபுரம்
Product Code: சாமளாபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                         சாமளாபுரம், சோழீஸ்வரர்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்  திருப்பூர் மாவட்டத்தின் 

இறைவன் : சோழீஸ்வரர்

இறைவி : தில்லை நாயகி

தல விருட்சம் : வில்வம்

தல தீர்த்தம் : கிணற்று நீர் 

தல சிறப்புகள் : பிப்ரவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

தல வரலாறு : சோமனூர் மத்தியில் காஞ்சிமாநதி என புகழப்படும் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, 1200 ஆண்டுகள் பழமையான வரலாறுச் சிறப்பு மிக்க சாமளாபுரம் தில்லைநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோயில். உறையூரில், உத்தம சோழன்மகன் உறையூர் சோழன், அறநெறி தப்பி ஆட்சி செய்தான். அவனை அழிக்க, காஞ்சிபுரம் கருமாரியம்மனை ஆதிசதாசிவன் வேண்டிக் கொண்டார். கருமாரியம்மன், உறையூர் வருவதை அறிந்த செவந்தீஸ்வரம், மன்னனுக்கு அறிவித்தார். உறையூர் சோழன் தனது மூத்தமனைவி சிங்கம்மாளையும், இளைய மனைவி சாமளம்மாளையும் பத்திரமாக கொங்குநாட்டுக்கு அனுப்பி வைத்தான். உறையூர் சோழனும் தப்ப முயன்றான், ஆனால் அவனை கருமாரிஅம்மன் மண்மாரி பொழிந்து அழித்தார்.

கொங்குநாட்டிற்கு வந்த சிங்கம்மாளும், சாமளம்மாளும் பிராமணக்குடியிப்பில், ராமபட்டர், சந்திரபட்டர் ஆதரவில் தங்கி கூலிவேலை செய்து வந்தனர். கருவுற்றிருந்த சிங்கம்மாளுக்கு ஆண்குழந்தை பிறந்தது. உறையூர் சோழநாட்டுக்கு அரசன் இல்லையே என வருத்தப்பட்டு, சடையப்பர், கச்சிவீரகாமாட்சிராயர், கஸ்தூரிரங்கப்பச் செட்டியார் ஆகியோர் காசிவிசாலாட்சி அன்னையை வழிபட்டு, வெள்ளை யானையிடம் மாலை கொடுத்து “நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவரே எங்களுக்கு மன்னர்” என்று அனுப்பினர். அந்த யானை சோழநாட்டையும், தொண்டை மண்டலங்களையும் கடந்து வந்து, கொங்குநாட்டில் குளத்தில் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த சிங்கம்மாளின் 12 வயது சிறுவனுக்கு மாலையணிவித்து தன் மீது அமர்த்தி அழைத்துச் செல்ல முயன்றது.

சிறுவன் பயந்து அழுவதை கண்டு ஓடி வந்த தாய் சிங்கம்மாள், மகனுக்கு கரிகாலன் என்று பெயரிட்டு ஆசிர்வதித்து யானையுடன் அனுப்பி வைத்தார், சிறுவன் மன்னரானார். பின்பு தனது சித்தி பெயரில் சாமளாபுத்தையும், தாய் பெயரில் சிங்காநல்லூரையும் உருவாக்கினார். கரிகால சோழனுக்கு புத்திர சோகத்தால், பிரமகத்தி தோஷம் ஏற்பட்டது. கை பார்த்து ஜோதிடம் பார்த்த குறத்தி கூறியபடி, ஆலய திருப்பணி செய்தான். அதன்படி, சாமளாபுரத்தில் சோழீஸ்வரர் கோயிலை பிரமாண்டமாக கட்டினார், குளம்வெட்டினார், பலஆயிரம்ஏக்கர்நஞ்சை, புஞ்சை நிலங்களை கோயிலுக்கு கொடையாக வழங்கினார்.

கோவில் அமைப்பு : இக்கோயிலில் சோழீயீஸ்ரர், தில்லைநாயகி சன்னதிகளும், தில்லைநாயகி, பஞ்சலிங்கம், சூரியன், அருள்மினு சந்திரன், தண்டபானி, பைரவர், தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. தமிழத்தில் மேற்குபார்த்த சிவாலயங்கள் ஐந்து இடங்களில் உள்ளன. அதில் ஒன்றாக, சாமளாபுரம் சோழீஸ்வரர் கோயில் உள்ளது. பெரும்பாலும், சிவாலயங்களில் ஆவுடையார் சிலை வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும். இக்கோவிலில், சதுரவடிவில் அமைந்துள்ளதோடு, ஐந்தரைஅடி உயரத்தில் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஆவுடையாருக்கும், லிங்கத்தையும் இணைக்கும் இணைப்பு, மிகவும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் உள்ளது. சிவனின் இடது பாகத்தில் தில்லை நாயகியாக அம்பாள் உள்ளார். தில்லை நாயகிக்கு பவுர்ணமியன்று, பால், தேன் அபிஷேகம் செய்தால், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் இடையே நம்பிக்கை உள்ளது. அதேபோல், துர்க்கையம்மனுக்கு ஏழுவாரம் தீபம் ஏற்றினால், திருமணத்தடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

காலை 7.30 முதல் பகல் 12.00 மணி, மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×