தென்மருதூர்





	


	



























	




 




	








 




12:38:54 PM         Thursday, April 30, 2026

தென்மருதூர்

Product Code: தென்மருதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                          தென் மருதூர், அகஸ்தீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகில் தென்மருதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : அகஸ்தீஸ்வரர்

இறைவி : வள்ளிநாயகி

தல தீர்த்தம் : சிவகுளம் 

தல விருட்சம் : வில்வம், அரசு

தல சிறப்புகள் : அகஸ்திய முனிவர் வழிபட்ட இடம். அகஸ்திய முனிவர் இங்கு தங்கி சிவனை வழிபட்டதால் அகஸ்திஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.   

கோவில் அமைப்பு : உலகம் சம நிலையைப் பெறுவதற்காக அகத்தியர் வேதாரண்யம் சென்றபோது இங்கு தங்கி சிவபெருமானுக்கு பூசை செய்துள்ளார். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இறைவனும், இறைவியும் தனித்தனியான சன்னதிகளில் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடி சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். தெற்குத் திசையை நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு நோக்கிய நிலையில் பிரம்மாவும் உள்ளனர். இக்கோயிலில் 100 நபர்கள் அமர்கின்ற அளவிற்கு மகாமண்டபம் காணப்படுகிறது.அதிகார நந்தியையும், பலிபீடத்தையும் கோயிலில் காணலாம். 1956, 1996 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர். 

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  திருவாரூர், கீழ்வேளூர்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×