மணக்கால், அகஸ்தீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கோராடச்சேரி வட்டத்தில் உள்ள கிராமமாகும். இது திருவாரூர்லிருந்து மேற்கு நோக்கி 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : அகஸ்தீஸ்வரர்
இறைவி : சவுந்திரநாயகி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : சிவகுலத்து குளம்
தல சிறப்புகள் : இறைவன் திருமண கோலத்தை காண அகத்தியர் முனிவர் தவம் செய்த இடம். தை மாதத்தில் சூரிய அஸ்தம நேரத்தின் போது சூரியன் கதிர்கள் மூலவர் மீது விழுகிறது.
கோவில் அமைப்பு : மேற்கு பக்க நுழைவாயில் ராஜகோபுரம் இல்லாததால் பஞ்ச மூர்த்திகளுடன் வாயில் உள்ளது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் சன்னதி ஒரு கலசத்துடன் உள்ளது. தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் சண்டீகேஸ்வரர் உள்ளார். மடப்பள்ளி எதிரில் தல விருட்சம், தட்சணமூர்த்தி சன்னதி உள்ளது. பிரதான நந்தி மண்டபத்தில் 14 தூண்களுடன் பலிபீடம், நந்தி உள்ளது. அம்மன் கிழக்கு பக்கம் பார்த்து உள்ளார். அருகில் மேற்கு பக்கம் பார்த்த வண்ணம் சனீஸ்வரர், பைரவர், சந்திரன் அருள்பாலிக்கின்றனர். மேற்கு பக்கம் பார்த்த நர்த்தன விநாயகர், அதிகார நந்தி வலது பக்கம் தலையை சாய்த்த வண்ணம் உள்ளார். 1000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலம். பெரு வேளூரில் அம்பிகை அபின்ன நாயகியாக தவக்கோலம் கொண்டு இறைவனை திருமணம் புரிய வந்த தவம் செய்த போது திருக்கரவீரத்தில் திருமணம் நடந்தது. ஸ்வாமிக்கு வலப்பக்கம் அம்பாள் சந்நதி உள்ளது.
திருமண தடை, புத்திர பாக்கியம் பல்வேறு பிரச்சனைகள் தீர பிராத்தனை செய்கின்றனர். கார்த்திகை, சஷ்டி முருகனை வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினகளில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 8.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை