நீடாமங்கலம், காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : பன்னீர் வில்வம்
தல தீர்த்தம் : வெண்ணாறு
தல சிறப்புகள் : காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் முதலான சகல தோஷங்களும் விலகும். திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
கோவில் அமைப்பு : கோவிலின் மூன்று பக்கமும் வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறுகள் ஓடுகிறது. கிழக்கு, தெற்கு இரு பக்கமும் மூன்று நிலை ராஜா கோபுரத்துடன் மூன்று கலசத்துடன் கோவில் உள்ளது. கொடிமரம், மடப்பள்ளி, யாக சாலை, நவக்கிரகம், சூரியன், சனிக்கேஸ்வரன் மேற்கு பக்கம் பார்த்து அமைந்துள்ளது.
கிழக்கு பக்கமாக மூலவரும், தெற்கு நோக்கி அம்பாளும் ஒரு கலசத்துடன் தனி சன்னதி கொண்டு உள்ளனர். நடராஜர் தெற்கு பக்கம் 5 கலசங்களுடன் தனி சன்னதி கொண்டுஉள்ளார். மகா மண்டபத்தில் 300 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். கிழக்கு பக்கம் பார்த்தவாறு விநாயகர், குருபகவான், தட்சணாமூர்த்தி,மஹாலக்ஷிமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், தெற்கு நோக்கி சண்டிகேஸ்வர சன்னதி உள்ளது. பிரதாப சிம்ம மகாராஜா காலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. விசாலாட்சிஅம்மன் ஐம்பொன்னால் செய்யப்பட்டுள்ளதால் எப்போதும் அலங்கார கோலத்தில் காட்சி தருகிறாள். இங்குள்ள ஸ்வாமிகள் சிலைகள் விக்கரங்களாக இருப்பதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஸ்ரீகாசிவிஸ்வநாதர் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர்,
வைகாசி விசாகம், திருவாதிரை அஷ்டமி, நவராத்திரி விழாக்கள் கொண்டாப்படுகிறது. வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் விமரிசையாக நடந்தேறும்.பத்து நாள் விழாவாக நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா, தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள். வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் இங்கு வந்து வணங்கினால், 16 வகையான சாபங்களும் நீங்கி வாழலாம்.
காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை