லால்குடி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. ரயில் நிலையத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் அருகிலேயே அமைந்துள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : சிவகாமசுந்தரி
தல சிறப்புகள் : சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சிவராத்திரி, நவராத்திரி, நாக சதுர்த்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
கோவில் அமைப்பு : கிழக்கு திசையில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார் நாகர், தட்சணாமூர்த்தி, சத்ய நாராயணர் திருமேனியும், வடக்கில் சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவ கிரக சன்னதி வட கிழக்கில் உள்ளது. மகா மண்டபத்தின் எதிரில் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அங்குச பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் காட்சி உள்ளது. கருவறையில் இறைவன் லிங்க திருமேனியாக கிழக்கு திசை நோக்கி உள்ளார். அர்த்த மண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும் வலப்புறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள்.மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற பெயரில் தனி சன்னதி கொண்டு உள்ளாள். கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமிகளில் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது. கைலாயநாதனின் கருத்தினை நிறைவேற்றும் சிவகாம சுந்தரியாக அம்பிகை அருளாட்சி செய்யும் தளங்களில் இத்தலமும் ஒன்று. ஆவணி மாத நாக சதுர்த்தி அன்று கோவிலை 108 முறை வலம் வந்து பூஜை செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராப்பள்ளி, லால்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை