திருவானைக்காவல்





	


	



























	




 




	








 




1:02:31 AM         Tuesday, April 21, 2026

திருவானைக்காவல்

திருவானைக்காவல்
திருவானைக்காவல் திருவானைக்காவல் திருவானைக்காவல் திருவானைக்காவல்
Product Code: திருவானைக்காவல்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              திருவானைக்காவல், பஞ்சமுகேஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவானைக் காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ கிழக்கில் உள்ளது.  பாப்பங்குறிச்சி, திருவெறும்பூர், வளலூர் என மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

இறைவன் : பஞ்சமுகேஸ்வரர்
இறைவி  :  திரிபுர சுந்தரி
தல விருட்சம் :  வில்வம்

தல சிறப்புகள் :  பஞ்சமுகேஸ்வரர். ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சத்தியோஜாதம், அகோரம், தத்புருஷம், வர்மதேவம், ஈசானம், என்பனவே அந்த ஐந்து முகங்கள். தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் பாணம் அமைந்துள்ளது. இந்த இறைவனுக்கு 64 முகங்கள். பாணம் முழுவதும் உள்ள 64 வரிக் கோடுகள் முகங்களாக கணக்கிடப்பட்டு அதே கோணத்தில் இறைவனை தரிசிக்கின்றனர் பக்தர்கள். இறைவனின் பின் புறம் நான்கு வேதங்கள் சாலிக்கிராமம் வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

தல வரலாறு : விச்ரவஸ்ஸீக்கு ராவணன், குபேரன் என்று இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவிற்கு அது வளர்ந்தது. யுத்தமும் நடந்தது. குபேரனின் அனைத்து சொத்துகளும், ஐஸ்வரியங்களும், புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன் மகாதேவரை ஆராதிக்க அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப் படுவான். உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை அப்போது அடையும்’ என்றது அக்குரல். பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தன் பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான்.

கோவில் அமைப்பு : பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம்.  வலது புறம் உள்ள இறைவனின் சன்னிதியில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார். நான்முகனுக்கு இருப்பது போல் சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எதிரே தனி சன்னிதியில் 90 டிகிரி நேர்க் கோணத்தில் இறைவி திரிபுர சுந்தரியின் சன்னிதி உள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள். இங்கு அம்மனுக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

ஆலய பிரகாரத்தின் மேற்கில் மகா கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜ லட்சுமி ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. தவிர சிவலிங்க வடிவிலான சதுஷ் சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஷ் சஷ்டி கலேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. ஆலயத்தின் தலவிருட்ச ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் அற்புதமான அதிசயம்.  இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜ ராஜேஸ்வரியின் சன்னதி உள்ளது.வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கிழக்கே பிரகாரத்தில் கால பைரவர் உள்ளார். மாத தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தேவக் கோட்டத்தின் தென்புறம் துர்க்கையின் திருமேனியும் கிடையாது. 

இங்கு இறைவனுக்கு மாத சிவராத்திரியிலும், பிரதோஷ நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுர சுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களிச் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் சிவாகம லிங்கம் எனவும் சொல்வார்கள். ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுவதே இதன் விசேசமாகும்.  இத்தல மூலவரையும், அம்மையாரையும் ஒருசேர வழிபடுவதால் நீண்ட நாட்கள் நின்றுருந்த திருமணம் கைகூடும். செல்வ வளம், உடல் நலம் பெரும் என்பது தொன்நம்பிக்கை. அவ்வாறு வேண்டயவை நிறைவேறியதும் மூலவருக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

காலை 6.30 முதல் 9.30 வரையிலும் மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×