மணக்கால்





	


	



























	




 




	








 




10:26:13 PM         Monday, April 20, 2026

மணக்கால்

மணக்கால்
மணக்கால் மணக்கால்
Product Code: மணக்கால்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                                                  மணக்கால், கைலாசநாதர் 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடியிலிருந்து 3 கி.மீ, திருச்சிராப்பள்ளியில் இருந்து கிழக்கு நோக்கி 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
 
இறைவன் : கைலாசநாதர்
 
இறைவி  :  சிவகாம சுந்தரி
 
தல விருட்சம் : வில்வம்

தல சிறப்புகள் :  இங்குதான், பலா மரப்பலகையில் மணைக்காலில் அமர்ந்து பிரம்மா, சரஸ்வதி தேவியை மணந்தார். அதனாலேயே இத்தலம் மணைக்கால் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தற்போது மணக்கால் என்றானது. 

கோவில் அமைப்பு :  இங்குள்ள அம்மன் சன்னதியும், சிவனின் சன்னதியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. அம்மன் சிவகாமசுந்தரி மேலிரு கரங்களில் தாமரை மலரையும், அட்சர மாலையையும் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவன் இலிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மா, சரஸ்வதியரின் மணநாளில் வந்து அவர்களுக்கு ஆசி புரிந்து பின் இங்கமர்ந்த இத்தலத்து இறைவனும், இறைவியும் தம்பதியரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அருள்புரிகின்றனர். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கை, விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, நவகிரக நாயகர்கள் சன்னதியோடு சனீஸ்வரர், பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். பொதுவாக எல்லாத் தலங்களிலும் காக வாகனத்தில் காட்சி தரும் சனீஸ்வரன் இங்கு கழுகு வாகனத்தில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.
 
தல வரலாறு : ராமமிஸ்வரர் என்றொரு புனிதர்  தன் குருவான உய்யக்கொண்டார் மீது அபார பக்தி மிக்கவர் அவர். குருவுக்கு தொண்டு செய்வதையே மகாபாக்யமாகக் கருதினார். ஒரு சமயம், உய்யக்கொண்டாரின் புதல்விகள் இருவர் ஆற்றுக்குச் சென்று நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம் என்பதால் பல இடங்களில் நீர் தேங்கி இருந்தது. பார்த்துப் பார்த்து நடந்தனர் அந்தச் சிறுமியர். ஓரிடத்தில் ஒருபுறம் சற்று பெரிய பள்ளமும், மறுபுறம் சேறும் சகதியுமாக இருந்ததைக் கண்டு, எப்படிக் கடப்பது எனப் புரியாமல் நின்றனர். அப்போது அந்தப் பக்கமாக வந்த ராமமிஸ்வரர் அந்தக் காட்சியைப் பார்த்தார். தமது குருவின் மகள்களின் தவிப்பை உணர்ந்த அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று அந்தச் சேற்றின் மேல் குப்புறப்படுத்தார். தமது முதுகில் நடந்து அதனைக் கடக்கும்படி அந்தச் சிறுமியிடம் சொன்னார். அவர்களும் அப்படியே நடந்து கடந்து சென்றனர். மணல் படிந்த அவர்களின் பாதச்சுவடுகள் அவரது முதுகில் பதிந்தன. குரு மீது அவருக்கு இருந்த அதீத மரியாதையையும், பக்தியையும் கண்ட மக்கள் அன்று முதல் அவரை மணல்கால் நம்பி என்றே அழைத்தனர். மணல்கால் நம்பி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கும் மணல்கால் என்ற பெயர் பெறும் பாக்கியம் கிட்டியது.
 
ஐப்பசி பவுர்ணமியில் நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை,  சனி கிரக பாதிப்புகளால் துன்பப்படுவோர் இங்குள்ள சனீஸ்வரனையும், தம்பதிகள் தங்களுக்குள் அன்பும், அன்யோன்யமும் நிலைத்திருக்க அம்மனையும், சிவனையும் வேண்டிக் கொள்கிறார்கள்.
 
காலை 9.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்சிராப்பள்ளி
 
பேருந்து  வசதி   : உண்டு
 
தங்கும் வசதி   :  இல்லை
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×