குன்னத்தூர்





	


	



























	




 




	








 




3:32:39 AM         Thursday, April 30, 2026

குன்னத்தூர்

குன்னத்தூர்
குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர்
Product Code: குன்னத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                              குன்னத்தூர் கைலாசநாதர் 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான  திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இதுசங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

இறைவன் : ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் 

இறைவி  :   ஸ்ரீசிவகாமி

நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

தல தீர்த்தம் : தாமிரபரணி 

தல விருட்சம் : வில்வம்

தல சிறப்புகள் : இச்சிவாலயம்நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது. நவக்கிரக கோவில்களில் ராகுத்தலமான திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இத்தலம் தொடர்மான செப்பேடு ஒன்றில் ,இத்தலத்தின் பெயரில் திருநாங்கீசநேரி என்றும் இறைவன் பெயர் திருநாகீசர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயர் திருநாகேஸ்வரர் என்ற பெயருடன் ஒத்து உள்ளது. ராகுவின் பரிபூரண அருளைப் பெற இத்தலத்து இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும் என்பர். கோடக நல்லூரைத் தரிசித்த பின்னர் இத்திருக்கோவிலுக்குச் செல்கிறோம். தற்சமயம் இவ்வூரில் இக்கோவில் மட்டுமே உள்ளது. இச்சிவாலயத்தின் மூலவர் கோத பரமேசுவரர், அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

இவ்வூரில் குன்று இருப்பதால் குன்றத்தூர் என்றும் அழைப்பர். செம்மண் பொருந்திய இடம் என்பதால் செங்காணி என்றும் அழைப்பர். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இச்சிவலிங்கத்தின் பாணத்தில் சர்ப்பம் போன்று அமைப்பு உள்ளது. இங்குள்ள ஆறுமுகநயினார் பன்னிரண்டு கரங்களுடன் மிக அழகாக ஒரே கல்லில் திருவாச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிக அருமையானதாகும். உரோமச முனிவரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தைச் சுற்றி இக்கோவில் 13 ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டிருக்கும் எனது தெரிகிறது. இத்தலம் திருமணத்தடை காலதோஷம் , நாக தோஷம் , வயிற்றுக்கோளாறு , மனநோய் , மூலநோய் ஆகியவை நீங்குவதற்கு ஏற்ற பரிகாரத்தலமாகும்.

ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும், ராகு பகவான் 18 ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்த சமயத்தில் அந்த மனிதர் ராகு திசையின்போது நடக்கும் சஞ்சாரத்திற்கேற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நான்காம் கயிலாயம் என்று அழைக்கப்படும் சங்காணியாகும்.

மேற்கில் திருவேங்கடமுடையார் கோயில் கொண்டுள்ள மேலத் திருவேங்கடபுரம் உள்ளது. அதனால் கிழக்குப் பகுதியிலுள்ள இந்த ஊர் 'கீழத்திருவேங்கடபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தாமிரபரணி, பச்சையாறும் இங்கு சங்கமம் ஆவதால் முற்காலத்தில் 'சங்காணி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் ஒரு சிறிய குன்று (சிறுமலை) இருப்பதால் தற்போது குன்னத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

தலவரலாறு : இப்பகுதியில் இருந்த அதிசய மாமரத்தில் ஆண்டிற்கு ஒரு பழம் மட்டுமே விளையும். அதை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒருமுறை நன்றாக கனிந்திருந்த பழம் அவ்வழியே தண்ணீர் எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் பானையில் விழுந்தது. அதை அறியாத பெண் வீட்டுக்கு சென்று விட்டாள். பழத்தை காணாத அரசன் யாராவது அதை திருடியிருப்பார்கள் என்று நினைத்து, வீடு வீடாக சோதனையிட்டான். அப்பெண்ணின் வீட்டில் சோதனை செய்யும் போது, பானைக்குள் பழம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மன்னன் அப்பெண்னை விசாரிக்காமல், அவளுக்கு மரண தண்டனை வழங்கினான். அப்பாவியான பெண் சாகும் வேளையில் பசுக்கள், பெண்கள் தவிர அனைவரும் அழியட்டும் என சாபமிட்டாள். அதன்படியே அவ்வூரில் பாம்புகள் பெருகி, ஊர் மக்களை தீண்டி கொன்றது. மேலும் இவ்வூர் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அவர்களை மணமுடிக்க யாரும் முன்வரவில்லை. எனவே அவர்கள் தங்கள் ஊருக்கு வந்த சாபம் நீங்க சிவனை வழிபட்டனர். சிவபெருமான் பாம்புகளை தன் மார்பில் சூடி சாபவிமோசனம் தந்தார். எனவே இவ்வூரில் கோவிலைத் தவிர வீடுகளே கிடையாது.

இத்தலத்து இறைவன் தன் மார்பில் பாம்பை சுமந்ததால் லிங்கத்திலும் பாம்பு இருக்கிறது ராகு அம்சம் என்பதால் லிங்கத்திற்கு நீல நிற வஸ்திரம் சார்த்துகின்றனர். இங்குள்ள பைரவரின் இடுப்பு மற்றும் மார்பிலும் தட்சிணாமூர்த்தியின் மீதும் பாம்பு வடிவம் இருக்கிறது. ராகு காலத்தில் சிவனுக்கு விஷேச பூசைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள ஆறுமுக நயினார் சிலை மிகவும் விசேஷமானதாகும். இவரது சிலையை தட்டினால் சப்தசுவர ஒலிகள் எழும். பிரகாரத்தில் கன்னி விநாயகர் கோயில் தனியாக உள்ளது சுப்பிரமணிய சுவாமி, சண்டேசுவரர், வயிரவர் ஆகியோருக்குத் தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளன. முதல் மண்டபத்தில் அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் காசி விஸ்வநாதரும், நடராஜரும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். மூன்றாம் மண்டபம் சிறியது. கருவறையே நான்காம் மண்டபம். இதில்தான் லிங்க வடிவில் கோதை பரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

காலை 7.30 மணி முதல் மதியம் 11.00 வரையிலும்  மாலை 5.00 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் திறந்து இருக்கும். 

அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை

அருகில் உள்ள ரயில் நிலையம் :  திருநெல்வேலி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×