உவரி சுயம்புலிங்க சுவாமி





	


	



























	




 




	








 




12:25:37 AM         Sunday, May 17, 2026

உவரி சுயம்புலிங்க சுவாமி

உவரி சுயம்புலிங்க சுவாமி
உவரி சுயம்புலிங்க சுவாமி உவரி சுயம்புலிங்க சுவாமி உவரி சுயம்புலிங்க சுவாமி உவரி சுயம்புலிங்க சுவாமி
Product Code: உவரி சுயம்புலிங்க சுவாமி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            உவரி சுயம்புலிங்க சுவாமி 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவன் : உவரி சுயம்புலிங்க சுவாமி
இறைவி  :  பிரம்மசக்தி அம்மன்

தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர் எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், 

தலவரலாறு : முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார். ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.

கோவில் அமைப்பு : கோயிலின் நுழைவாயிலினைக் கடந்து உள்ளே மூலஸ்தானத்திற்குச் சென்றால் அங்கே சுயம்புலிங்கசுவாமியைக் காணலாம். கோயிலின் வெளிப்புறம் வலது புறத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் உள்ளது. சிவன் கோயிலுக்கு இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் முன்னடி சாமி உள்ளது. அதற்கடுத்தபடியாக பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பேச்சியம்மன் சன்னதியில் பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களைக் காணமுடியும். விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் சிறப்பு நிகழ்வாகும். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதோசம் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு. பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேடமான வழிபாடாக உள்ளது.

உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.

தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.  இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். 

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்செந்தூர்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×