பாப்பான்குளம் திருவெண்காடர்





	


	



























	




 




	








 




12:37:30 AM         Saturday, May 16, 2026

பாப்பான்குளம் திருவெண்காடர்

பாப்பான்குளம் திருவெண்காடர்
பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர் பாப்பான்குளம் திருவெண்காடர்
Product Code: பாப்பான்குளம் திருவெண்காடர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              பாப்பான்குளம், திருவெண்காடர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் 33 கி.மீ. அங்கிருந்து கோயில் செல்ல 1 கி.மீ.. ஆட்டோ வசதி உண்டு.

இறைவன் : திருவெண்காடர்

உற்சவர் : சுவே தாரண்யேசுவரர் தீர்த்தம்

இறைவி  :  வாடா கலைநாயகி

தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

தல விருட்சம் :  பவளமல்லி

தல சிறப்புகள் :  லிங்கம் சந்திரகாந்தக் கல் என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும். இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும். இங்குள்ள மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

தல வரலாறு : வேதம் ஓதிக் கொண்டிருந்த துர்வாசர், ஒரு இடத்தில் ஸ்வரம் தவறுதலாகச் சொல்ல, சரஸ்வதி தேவி சிரித்து விட்டாள். இதனால் 64 வருடம் பூமியில் இருந்து, 64 கலைகளையும் மானிடர்க்குக் கற்றுக் கொடுக்கக் கடவது” எனச் சாபம் கொடுத்தார் துர்வாசர். அதன்படியே ராம நதி பாயும் இத்தலத்தில் திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும்  பிரம்மனும், சரஸ்வதியும் வழிபட்டனர்.

சிவபக்தரான பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன், பல சிவாலயங்களை கட்டி வந்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். கலை நுணுக்கத்துடன் சிலை வடித்து மன்னரின் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு மன்னர், நிலம் தானமாக வழங்கினார். அந்தப்பகுதி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. சிலகாலம் கழித்து, சதுர்வேதிக்கு, வாழ்வில் பல இடையூறுகள் ஏற்பட்டன. ஜோதிடம் பார்த்த போது, கிரகதோஷமே துன்பத்திற்கு காரணம் என்றனர். இதற்குப் பரிகாரமாக சந்திரகாந்தக் கல்லில் சிவலிங்கம், பரிவார தெய்வங்கள், நவக்கிரகங்கள் வடித்து ஒரு கோயில் கட்டும்படி கூறினர். இதை மன்னரிடம் சதுர்வேதி தெரிவித்தார். அவரது துணையுடன் தனக்கு தானமாக தரப்பட்ட நிலத்தில், கோயில் கட்டி குளம் வெட்டினார். இந்தக் குளம் கல்குறிச்சி குளம் எனப்படுகிறது. இதன்பிறகு அவருக்கு கஷ்டம் குறைந்தது. சந்திரகாந்தக்கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை திருவெண்காடர் என்கின்றனர். தாமிரபரணியின் வளமையால் இப்பகுதியில் பலவித பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததால் இப்பகுதி முதலில் பாப்பாங்கு என்று பெயர் பெற்றது. பாப்பாங்கு என்றால் பறவைக்குஞ்சு. இப்பெயரே காலப்போக்கில் மருவி பாப்பான்குளம் ஆகிவிட்டது.  தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும். ஆனால், இப்போது நாம் தரிசிக்கப் போகும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நாகம் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி, நாகம் தட்சிணாமூர்த்தியின் காலடியில் சிற்பமாக இருப்பது அரிதான ஒன்று.

பகைவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போருக்குச் செல்லும் முன்னர், இங்கு வந்து திருவெண்காடரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் பாண்டியர்கள். ஆதித்யவர்மன் என்ற பாண்டிய மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, இங்கு வந்து வழிபட்ட பின்னர் குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்றதால், இந்த ஆலயத்தை இன்னும் பெரிதாக விரிவுபடுத்தி, சதுர்வேதி என்ற சிற்பியைக் கொண்டு இங்குள்ள சிலைகளை நிர்மாணித்ததாகவும், அந்தச் சிற்பிக்கு ஓர் ஊரையே தானமாக அளித்ததாகவும், அந்த ஊர் அவர் பெயரிலேயே சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு ராமர் வந்தபோது, இங்குள்ள ஆற்றில் சந்தியாவந்தனம் செய்தாராம். ராமர் அமர்ந்த அந்தப் பாறை ‘சக்கரப் பாறை’ என்ற பெயரில் இன்றளவும் பூஜிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட புண்ணிய நதியான ராம நதியும், கடனா நதியும் சங்கமிக்கும் இடம் பாப்பான்குளம். உத்தரபுரி என்று திருவெண்காட்டையும், மத்தியபுரி என்று மதுரையையும், தட்சிணபுரி என்று பாப்பான்குளத்தையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம். சம்பகாசுரனை அழிப்பதற்காக ராமன் இந்தத் தலத்தின் இறைவனை வணங்கினாராம். இந்த சந்தியா பாறையில் ராமபிரான் ஏறி நிற்க, அவர் முன் நேர்நிலையிலும் கீழ்த் திசையிலும் சிவ ஜோதி தோன்றி, சம்பகன் இருக்கும் இடத்தைக் காட்டியதாம். பாப்பான்குளம் திருவெண்காடரும், மடவார்விளாக திருக்கருத்தீசருமே இவ்வாறு ஜோதியாகத் தோன்றி ராமபிரானுக்கு வழிகாட்டினர் என்பர். அதனால், பாப்பான்குளம் திருவெண்காடரை ராமபிரான் வணங்கியதாக தலபுராணம் சொல்கிறது. பொதிகை மலைச் சாரல் தவழும் சிவசைலம் அருகிலுள்ள சம்பங்குளத்தில்தான் சம்பகவதம் நடந்ததாகச் சொல்வர். இதற்கு ஏற்ப, பாப்பான்குளம் சிவன் கோயில் அருகே பழநி ஆண்டவர் கோயிலும், அதன் எதிர்ப்புறம் ராமசாமி பெருமாள் கோயிலும் உள்ளன.

இவ்வூர்க் கல்வெட்டில் ராஜசதுர்வேதி மங்கலத்தின் வடமேற்கே வேளார்குறிச்சியில் பகவதி விண்ணகர் ஆழ்வார் என்ற வாசகம் உள்ளது. அதன்படி, நான்கு வேதங்களும் அறிந்த அந்தணர்கள் வாழ்ந்ததால் பாப்பான்குளம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
பாண்டியன் ஆதித்தவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாப்பான்குளம் திருவெண்காடர் கோயில் இன்று சிதிலமடைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கிய இக்கோயிலில் வாடாகலைநாயகி அம்மை முப்பத்திரண்டு கலையம்சங்களுடன் கூடிய அம்பாள் திருவுருவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிற்பி ஒருவர், சங்கப் புலவர்கள் போல் தன் பெயரை உரைக்காமல் கல்குறிச்சி என்ற பெயருடனும் இவ்வூரில் வாழ்ந்து பல சிற்பங்கள் செய்தவர். அவர் பெயரால் இவ்வூரில் கல்லக்குறிச்சி குளமும் உள்ளது.

இங்குள்ள சனிஈஸ்வரரை சோழனின் படைத்தளபதி வழிபட்டு, சனி தோஷம் நீங்கப் பெற்றான். அதன் பிறகே அவனுக்கு, சேரனை வெல்வதற்கான பலம் கிடைத்தது என்பர். இவ்வகையில் எதிரிகளை வெற்றி கொள்ள இங்குள்ள சனி ஈஸ்வரரை வணங்குதல் நலம் பயக்கும். ஆனி, ஆடி மாத சனிக்கிழமைகளில் குளித்து திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் தரிசித்து, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கும். கங்கையிலிருந்து அத்ரி முனிவர் கடனாகப் பெற்று உற்பத்தி செய்த ஆறு கடனா நதி. அகத்தியரின் கமண்டலத்திலிருந்து சிதறிய துளி ராமநதி. இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தமாடுவதால் புண்ணியம் கிட்டும்.

கோவில் அமைப்பு : இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும். பிராமணர்கள் வேதங்கள் ஓதி பூஜை செய்த இடமாதலால் ‘பார்ப்பான்குளம்’ என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்று மருவியது என்கிறார்கள். புதன் பகவான் வணங்கி பேறு பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலை பாண்டிய மன்னன் ஆதித்யவர்மன் நிர்மாணித்ததாக வரலாறு.

அழகிய குளத்தின் கரையில் மூன்று நிலை புதிய ராஜ கோபுரத்துடன் காட்சியளிக்கிறது இந்த திருக்கோவில். உள்ளே சென்றவுடன் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம். அதனை தாண்டி உள்ளே சென்றால் நேராக கிழக்கு நோக்கிய சுவாமி திருவெண்காடர் சன்னதி. சுவாமிக்கு வலது பக்கம் தெற்கு நோக்கிய அம்மை வாடாகலைநாயகி சன்னதி. சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் விநாயகரும், சுப்பிரமணியரும், நனராசரும், தல உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர். இது தவிர பிரகாரத்தில் அதிகார நந்தி, தட்சிணாமூர்த்தி, சப்த மாதர், விநாயகர், விஷ்ணு, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சனீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோரோடு நவக்கிரகங்களும் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளனர். 

இங்கு தாராஹோமம் நடைபெறும் போது வெளியே வானில் கருடன் வட்டமிடுவது சிறப்பு. இங்குள்ள சனீஸ்வரனின் சிற்பம் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரை முறையாக வழிபட்டால், எதிரி பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு மாசி மாதம் சிவராத்திரி விழா விமரிசையாய் நடைபெறுகிறது. இது தவிர சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப் பூசம், பங்குனி உத்திரம் ஆகிய வருடாந்திர விழாக்களும், பிரதோஷம் மற்றும் பெளர்ணமி மாதாந்திர வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புதனுக்கு ‘கிரஹபீடாஹரன்’ என்று ஒரு பெயர் உண்டு. மற்ற கிரகங்களால் விளையும் அசுபலனைப் போக்கும் வல்லமை புதனுக்கு உண்டு. அந்த புதனே வழிபட்ட தலம் என்பதால் இந்த இறைவனை பூஜித்தால் எல்லா கிரக தோஷமும் நிவர்த்தியாகும், பூரணக் கல்வி கைகூடும். அன்னை வாடாகலை நாயகி, கலைகளின் தாயாக விளங்குவதால், இவளை வணங்க கலைகளில் சிறந்து விளங்கவும், சிறப்புடன் செயல்படவும் முடியும். சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம். இக்கோயிலில், பிரதோஷம், சிவராத்திரி, சித்திரை 1 மற்றும் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை விசேஷமானவை. இங்குள்ள குரு பகவான் காலடியில் நாக வடிவம் காணப்படுவதால், இவரை வணங்க இராகு, கேது தோஷம் நீங்குகிறது. 

காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் :  தூத்துக்குடி, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருநெல்வேலி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×