கிளாங்காடு





	


	



























	




 




	








 




10:52:49 PM         Friday, May 15, 2026

கிளாங்காடு

கிளாங்காடு
கிளாங்காடு கிளாங்காடு கிளாங்காடு கிளாங்காடு கிளாங்காடு கிளாங்காடு
Product Code: கிளாங்காடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     கிளாங்காடு , ஜமதக்னீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில் கிளங்காடு செங்கோட்டை வட்டாரத்தில்   அமைந்துள்ளது.

இறைவன் : ஜமதக்னீஸ்வரர்

இறைவி  :  நல்லமங்கை

தல சிறப்புகள் :  1000 கைகள் பெற்ற மன்னனின் படைகட்கு ஜமதக்னிமுனி உணவுபடைக்க வியந்தமன்னன் காரணமான காமதேனுவை தரகேட்க, மறுத்த முனியை சிரச்சேதம் செய்து மனைவி ரேனுகா தேவியை 21முறை வாளால் குத்த, அருளால் மகன் வரும் வரை உயிரை தக்கவைத்து பரசுராமரிடம் கூறி உயிர்நீத்தார். 16-ம் நாள் காளியாக அவதாரம். மகனுக்கு மழு ஆயுதம் 21 தலைமுறைக்கு மன்னனின் சத்ரியவம்சத்தை கருவறுக்க சபதம் நிறை வேறியபின் தந்தை வழிபட்ட லிங்கத்திற்கு ஆலயம்.

கோவிலில் ஈசான்ய மூலையில் ரேணுகா தேவி தனியாக அமைந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தை கட்டிய பராக்கிரம பாண்டியன் இவ்வழியாக குதிரையில் செல்லும்போது கால் இடறி விழுந்த குதிரை எழ மறுத்தது. அப்போது ஆசிரி வாக்கு மன்னனுக்கு பூமியை தோன்றுமாறு பணித்தது. அப்படி தோண்டிய போது ஜமதக்கனி முனிவர் பூஜிக்க பட்ட இந்த சிவ லிங்கம் கிடைத்தது. பிரதோஷம், சிவராத்திரி இங்கு சிறப்பிக்க கொண்டாடப்படுகிறது. 

தல வரலாறு : ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும்  முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். விநாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப்  பகுதிக்கு வேட்டையாட வந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல்  திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான். மன்னனுக்கும்  பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர். எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு  என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல்  உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சில நச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான்.  முனிவர் ஜமதக்னியோ, அது தெய்வீகப் பசு ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது, என்று மறுத்தார்.

அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு  கண்ஜாடை காட்டினார். அவ்வளவுதான் தனது கொம்புகளை சூழட்டு சிலுப்பிய  வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து  மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்த பின் மறைந்து போயிற்று, ஆயிரங்கைகள்  கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்து விட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம்  வைத்தான். கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமதக்னி முனிவர் சிவலிங்கத்தின்  முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரம் மாமுனியை சிரச்சேதம் செய்தான் மன்னன். பரசுராமன் பகைவர்களை  பழி தீர்த்தபின் தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஆலயம்  அமைத்தான். ஜமதக்னி வழிபட்ட ஈசன் என்பதால் ஜமதக்னீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

 காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  செங்கோட்டை 

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×