உத்தமபாளையம்





	


	



























	




 




	








 




11:11:54 AM         Saturday, May 02, 2026

உத்தமபாளையம்

உத்தமபாளையம்
உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம் உத்தமபாளையம்
Product Code: உத்தமபாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              உத்தமபாளையம், காளாத்தீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தேனி மாவட்டத்தில் கம்பம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் உத்தமபாளையம். இந்த ஊருக்கு தேனியிலிருந்து பஸ் வசதி நிறையவே உள்ளது. ஊரில் நடுவில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு எளிதாக செல்லலாம்.

இறைவன் : காளாத்தீஸ்வரர்

இறைவி  :  ஞானாம்பிகை

தல தீர்த்தம் : உத்தரவாகினி

தல விருட்சம் :  செண்பகம் 

தல சிறப்புகள் : தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமையப்பெற்றுள்ளது . இங்குள்ள சிவனை வழிபட்டால் காளகஸ்தி சிவனை வணங்கும் பலன் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.  கோயில் மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்றிலுமே சிறப்புற்று விளங்குகிறது. சிவன் அம்மன் முருகன் மூவருமே இயற்கையாக தோன்றியதால் இங்கு மூர்த்தி மிகவும் சிறப்புடையதாகும். 
இந்தியாவிலேயே காசியைப் போன்று மூன்று இடங்களில் மட்டும் தான் நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுவதும். அதன் கரையில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்திருப்பதும் ஆகும்.இந்த காளாத்திநாதரை வியாக்ரபாதர் பாம்பாட்டி சித்தர் பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். அத்துடன் அருகிலுள்ள சுருளிமலைக்கு வந்த சித்தர்கள் அனைவருமே இங்கு வந்து வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 63 நாயன்மார்கள், சப்த கன்னியர்கள், சகஸ்ரலிங்கம், ஜஸரதேவர், நடராஜர், நவகிரகங்கள், பைரவர் என அனைவரையும் ஒரே இடத்தில்  தரிசிக்கலாம்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்.எனவே இங்கிருந்த படியே சிவனிடம் இறைவா வயதான என்னால் உன்னை அங்கு வந்து தரிசிக்க இயலவில்லை என்று அழுது புலம்பினார்.அடியவரின் குரலுக்கு செவிசாய்த்த இறைவன் அன்றிரவே பிச்சையின் கனவில் தோன்றி உத்தமபாளையத்தில் ஓடும் சுருளியாற்றங்கரைக்கு மகா சிவராத்திரியன்று வருக. அங்கே உனக்கு காட்சியளிக்கிறேன்.அது காளகஸ்தியில் என்னை வணங்கிய பலன் கிட்டும்.என கூறி மறைந்தார்.இதன் படி சிவனடியாரும் சிவராத்திரியில் ஆற்றங்கரை சென்று தியானிக்க காளத்திநாதர் அவர் முன் காட்சியளித்தார்.சிவன் சிவனடியாருக்கு காட்சியளித்த இடமே இன்றுள்ள உத்தமபாளையம் காளாத்திநாதர் ஞானாம்பாள் திருக்கோயிலாகும். இப்படி சிவனே காட்சியளித்ததால் இத்தலம் மிகவும் சிறப்புடையதாகும். இங்குள்ள ஞானம்மன் சுருளியாற்றில் மிதந்து வந்தவர். இவரை வணங்கினால் ஞானம் பெருகும்.அதே போல் இங்குள்ள ஆறுமுகனும் இப்பகுதியில் பூமியை தோண்டிப்பார்த்த போது வள்ளி தெய்வானை சகிதமாக கிடைத்தவர் தான்.

நாயக்க மன்னர்கள்  ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணி மங்கம்மாவின், உத்தமபாளையம் பகுதி     படை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர்  கொண்ட நாயக்கர்   இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிபட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம்  தெரிவித்தார். அதன் பிறகு பாளையக்காரர் ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இந்தக் கோயில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்கு சிலை செய்த மன்னர் அம்மனுக்கு சிலை அமைக்க பல முறை முயன்று தோல்வியுற்றார் . இதனால் அம்பிகை இல்லாத கோவிலாக சில காலம் இருந்தது . பிறகு இங்கு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றார் , அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையை கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர் பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர். அம்மனுக்கு பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பு. இங்குள்ள கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்ட தேவி, ஞானாம்பிகை என்று எட்டு அம்பிகைகளும் ஒரே கோவிலில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

தாய் சேய்  நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவு நன்கு அமையும். சித்திரை திருக்கல்யாணம், ஐப்பசி அன்ன அபிசேகம், சிவராத்திரி, திருகார்த்திகை தீபம் போன்ற நாட்களில் திரளான மக்கள் இங்கு கூடுகின்றனர் .குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, பயம் நீங்க பாறையடி முத்தையாவிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமிக்கு வஸ்திரம், ஆபரணங்கள் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். புத்திரபாக்கியம், திருமண தடைவிலகல் செவ்வாய் தோஷ நிவர்த்தி ஆகியவற்றிற்காக வழிபட்டால் நல்ல பலன் உண்டு நேர்த்தி கடன் ராகு கேது தோஷம் நீக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனி கோயில் உண்டு. இதில் ராகு கேதுக்குரிய கோயில் காளகஸ்தி ஆகும். இதே காளாத்திநாதர் உத்தமபாளையத்திலும் தோன்றியதால் இத்தலமும் ராகு கேது தோஷம் நீக்குவதில் சிறந்த தலமாக விளங்குகிறது. 


காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  மதுரை,  திண்டுக்கல்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×