கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது.
இறைவன் : பிரகதீஸ்வரர்,பெருவுடையார்
தல விருட்சம் : பின்னை, வன்னி மரம்.
தல சிறப்புகள் : கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும். இக்கோவிலின் வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன. அவை முறையே "வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும். வடகைலாய கோவிலில் பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்து உள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கு ஏற்றார் போல் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்கு உள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்மாற்றத்திற்கு முன்பு வன்னியபுரம், வன்னியபுரி என்ற பெயர்களால் இவ்வூர் அழைக்கப்பட்டுவந்துள்ளது. இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கை கொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும் கட்டினார். இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. கங்கையை வெற்றி கொண்டு அந்த கங்கை நீரினைக் கொண்டு வந்து "பொன்னேரி" எனும் சோழ கங்கை பேரேரியில் ஊற்றினான். இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.
கோவில் அமைப்பு : கோயில் விமானம் தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும். அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது. மண்டபம் 340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது. அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது. தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன. 140 தூண்கள் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
அம்மனுக்கு தனிக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சண்டேச அனுக்ரஹ மூர்த்தி தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார். சிம்ஹகேணி கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு. நந்தி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று. துவாரபாலகர்கள் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக காட்சிதரும் துவாரபாலகர்கள். நடராஜர் அற்புத வேலைப்பாடுகளுடன் அமைந்த நடராஜர் சிலை. இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்கும் கலைஞர்கள். மஹிசாசுரமர்த்தினி மஹிசாசுரனை சம்ஹாரம் செய்யும் துர்கா தேவி. ஒரு பெண் சிவபெருமானை வழிபடுவது போன்று கோயில் சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம். சிதைந்த சிற்பங்கள் கோயில் வளாகத்தில் உள்ள சிதைந்த மற்றும் முடிக்கப்படாத சிற்பங்கள். சரஸ்வதி ஞான சரஸ்வதியின் சிற்பம். முடிக்கப்படாத மண்டபம் நிறைய தூண்களுடன் காட்சியளிக்கும் முடிக்கப்படாத மண்டபம் அமைந்துள்ளது.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி, பங்குனித் திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆடுதுறை, மயிலாடுதுற, வைத்தீஸ்வரன் கோவில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு