உமையாள்புரம்





	


	



























	




 




	








 




5:16:04 PM         Tuesday, May 26, 2026

உமையாள்புரம்

உமையாள்புரம்
உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம்
Product Code: உமையாள்புரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  உமையாள்புரம், காசி விசுவநாதர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து வடக்கே 23 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவன் : காசி விசுவநாதர்

இறைவி  :  குங்கும சுந்தரி

தல தீர்த்தம் : காவிரி

தல விருட்சம் : வில்வம்

தல சிறப்புகள் : இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இங்கு வந்தவர்கள் ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்கவும் வசதியிருக்கிறது.

தல வரலாறு : படைப்புக் கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்” என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார் முருகன். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது. உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், “உமையாள்புரம்” எனப்பெயர் பெற்றது.

விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டித் தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு : அம்பாள் சன்னதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவளாக இருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். கணவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாள் சன்னதி எதிரே ராஜமகா வல்லபகணபதி தனி சன்னதியில் இருக்கிறார். காவிரி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர் சன்னதிகள் உள்ளன. கந்தர்வப்பெண் உருவாக்கிய தீர்த்தம் ஊர் எல்லையில் இருக்கிறது.

வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் இங்கு எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார். பெண்கள் தங்களது கணவர் உடல் நலத்துடன் வாழவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும், அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்து கின்றனர். இத்தலத்தில் வேண்டிக்கொள்ள காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும்.பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க, கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரம் காசிவிஸ்வநாதர் கோயில், குங்குமசுந்தரி அம்பாள் சன்னிதியில் வளைகாப்பு நடத்துகின்றனர்.

காலை 5.30 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×