சாத்தனுர்





	


	



























	




 




	








 




8:01:36 AM         Saturday, May 02, 2026

சாத்தனுர்

சாத்தனுர்
சாத்தனுர் சாத்தனுர் சாத்தனுர் சாத்தனுர் சாத்தனுர்
Product Code: சாத்தனுர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                         சாத்தானூர், காசி விஸ்வநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயவரம் கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும்.

இறைவன் : காசி விஸ்வநாதர்

இறைவி  :  ஸ்ரீ விசாலாட்சி

தல சிறப்புகள் : 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான  திருமூலர்  அவதார தலம்.

தல வரலாறு : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார். அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார். அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார். இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது, அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார். இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான். இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன. எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள். அப்போது மூலன் அங்கே வந்தான், அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள். உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார். உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள். 

மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவர் உடல் இல்லை, இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார். அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார். அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான். மரம், செடி, விலங்குகள், மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார். அந்த மூலன் வேற யாரும் இல்லை, வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள் வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர்.

கோவில் அமைப்பு : அம்பாளும், சுவாமியும் தனித்தனி ஆலயங்களில் உள்ளனர். திருமூலர் இணைப்பைக் கருத்தில் கொண்டு, இது திருமூலர் கோயில் என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.    ஐந்து பஞ்சலிங்க க்ஷேத்திரங்கள் அனைத்தும் சாதனூருக்கு அருகிலேயே உள்ளன.   அவை 1.  சாத்தானூர் விஸ்வநாதர் 2. திருவாவதுதுரை கோமுக்தேஸ்வரர் 3. சித்தேஸ்வரர் 4. கைலாசநாதர் மற்றும் 5. ஐராவதேஸ்வரர் கோயில்கள்.   சாத்தானூர் புறக்கணிக்கப்பட்டு கோயில் இடிந்து விழுந்தது.   திருவாவதுதுரை ஆதீனம் முன்முயற்சி எடுத்து 2001 ல் கும்பாபிஷேகம் நடத்தியது, திருவாவதுதுரை கோயில் சிறப்பாக இருந்தது.   சித்தேஸ்வரர் கோயில் 50 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது, கைலசநாதர் கோயில் புதுப்பிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது.   எஞ்சியிருக்கும் ஒரே கோவில் ஐராவடேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்தது, அங்கு ஒரு லிங்கம் மட்டுமே தெரியும். கோயில் வளாகம் முழுவதும் நெல் வயல்களாக மாற்றப்பட்டது, எனவே கருவறை உட்பட கோயில் தரை மட்டத்திலிருந்து கட்டப்பட வேண்டும். 

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்
பேருந்து  வசதி   : உண்டு
தங்கும் வசதி   :  இல்லை
உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×