கும்பகோணம்





	


	



























	




 




	








 




4:02:09 PM         Friday, May 01, 2026

கும்பகோணம்

கும்பகோணம்
கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம்
Product Code: கும்பகோணம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  கும்பகோணம், அபிமுகேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இறைவன் : அபிமுகேஸ்வரர்

இறைவி  :  அமுதவல்லி

தல தீர்த்தம் : மகா மக குளம்

தல விருட்சம் : நெல்லி மரம் 

தல சிறப்புகள் : இந்த கோவிலில் தான் மிக பெரிய பைரவர் சிலை உள்ளது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி பகவான் மட்டும் உயரம் கூடுதலாக இருப்பது சிறப்பு. இக்கோயில் 12ராசிகளில் துலாம் ராசிக்கு சிறப்பான கோயிலாகும்.

தல வரலாறு : அமுத கும்பத்தில் அணிந்திருந்த தேங்காயில் தோன்றியவர். இதனால் இக்கோயிலுக்கு நாளிகேரேசம் என்றும், பெருமானுக்கு நாளிகேரசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மகாமக தீர்த்தத்தில் நீராடுவதற்கு கங்கை முதுலிய நதிமடந்தையர் ஒன்பது பேருக்கும் பெருமான் மேற்கு முகமாக இருந்து காட்சி கொடுத்ததால் அபிமுகேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. 
ஒரு சமயம் சுபதன் என்ற அந்தணன் தனது மகள் சுமதி என்னும் பெண்ணுக்கு குட்ட நோய் பற்ற அதனைத் தீர்க்கும் பொருட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றான். அவ்வந்தணனை சந்தித்த நாரத முனிவர் குடந்தை சென்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அதன் கிழக்குக்கரையில் அமர்ந்திருக்கும் அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோய் தீரும் என்று கூறினார். அவ்வாறே அவ்வந்தணரும் மகாமகம் அன்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை வணங்கிப் போற்ற அக்கொடிய நோய் நீங்கியது. 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×