கும்பகோணம், ஏகாம்பரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. கும்பகோணம் மகாமக குளத்தின் வடக்கில் நாகேஸ்வரன் தெற்கு வீதியின் கிழக்கு பகுதியில் உள்ளது.
இறைவன் :ஏகாம்பரேஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மன்
தல தீர்த்தம் : மகாமக குளம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இக்கோயிலின் திருச்சுற்றில் வடக்கு நோக்கிய இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள காளிகா பரமேஸ்வரிக்குத் தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலின் மற்றொரு தனித்துவமான விஷயம் என்னவென்றால், தினமும் ராகுளத்தில் பூஜை செய்யப்படுகிறது.
காசி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு செல்ல இயலாதவர் இக்கோயில் இறைவனை வழிபாட்டு அருள் பெறலாம் இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
கோவில் அமைப்பு : கோயிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது. மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.
மூலவர் கருவறையின் வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். திருச்சுற்றின் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விநாயகர் காணப்படுகின்றனர். நவக்கிரகங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார். நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை மூலவருக்கு முன்பாகக் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பூஞ்சோலை மாரியம்மனுக்காக ஒரு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. இந்த கோயில் விஸ்வகர்மா சமூகத்தினரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, ஏனெனில் அவர்களின் குல தெய்வம் ஸ்ரீ காமாட்சி. இந்த கோவிலை அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக நாம் அம்பாளுக்கு முன்னால் சிங்கத்தைக் காண்கிறோம். இந்த கோவிலில், அம்பாளுக்கு முன் ஒரு நந்தியைக் காண்கிறோம். திருச்சுற்றில் வடக்கில் பூஞ்சோலை மாரியம்மனுக்காக ஒரு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில், சிவசக்தி ஸ்வரூபத்தில் தோன்றுகிறார். எனவே நந்தி அவளுக்கு முன்னால் இருக்கிறாள், அவள் மட்டும் மகாமக பண்டிகைக்கு செல்கிறாள்.
ராகுகாலத்தின் போது பிரார்த்தனை செய்யும்போது, அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். தமிழ் மாத பூரம் நட்சத்திரத்தில், சுமங்கலி பூஜை மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், அவளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், அது பெரும்பாலும் வெற்றியில் முடிகிறது என்று நம்பப்படுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு