கும்பகோணம், காளஹஸ்தீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் காமாட்சி ஜோசியர் தெருவின் கடைசியில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இறைவன் : காளஹஸ்தீஸ்வரர்
மூர்த்தி : கல்யாணசுந்தரமூர்த்தி, அஷ்டதச புஜமகா துர்க்கை, ஜீரகேஸ்வர்.
இறைவி : ஞானாம்பிகை
தல தீர்த்தம் : காவிரி
தல விருட்சம் : வில்வ மரம்
தல சிறப்புகள் : இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரமூர்த்தி சன்னதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
கோவில் அமைப்பு : இக்கோயில் காவிரியாற்றின் தென்புறம் உள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது. மூலவர் கருவறையின் வலப்புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றன. திருசுற்றில் சித்தி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், காசி விசுவநாதர், சரஸ்வதி, லட்சுமி, கங்கை ஆகியோருக்கான தனி சன்னதிகள் காணப்படுகின்றன. திருச்சுற்றின் இறுதியில் நவக்கிரகங்கள் உள்ளன. அருகே தனியாக ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கருவறையின் இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகில் உள்ள காமாட்சி ஜோசியர் தெருவில் இக்கோயிலுக்கான மற்றொரு வாயில் உள்ளது. அந்த வாயிலில் சித்தி விநாயகர் கோயிலைக் கடந்து கோயிலின் உள்பகுதிக்கு வலப்புறம் வழியாக வருவதற்கு பாதை உள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் கோபுரத்துடன் கூடிய முதன்மை வாயில் மடத்துத் தெருவில் இருந்தாலும், இந்த விநாயகர் கோயில் வழியாக காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம் என்பதை அறிவிக்கும் வகையில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் பெயர்ப்பலகை விநாயகர் கோயிலின் முன்பாக காணப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக விநாயகர்உள்ளார். நடராஜர் ஒரு அழகான மூர்த்தி வைத்திருக்கும் நீதிமன்றத்துடன் ஒரு தனி ஆலயத்தை வைத்திருக்கிறார். இந்த சன்னதியில் சிவகாமி அம்பால், மாணிக்கவாச்சகர் ஆகியோரும் உள்ளனர்.
கடுமையான ஜுரம் அடிப்பவர்கள் இத்தல ஜுரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசி, நிவேதனம் செய்து மிளகுரசம், பருப்புதுவையல் நிவேதனம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் ஜுரம் குறைந்து விடும். இத்தலத்தில் உள்ள ஆராய்ச்சிமணியை அடித்தால் "ஓம்" என்ற ஓசை கேட்கும். இத்தலப் பெருமானும் மகாமகத்திற்கு எழுந்தருள்வார். எலும்பு, நரம்புகள் மற்றும் தோல் பிரச்சினைகள் காரணமாக மக்கள் நோய்களைக் கட்டுப்படுத்துகிறார்கள், மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகையில், இந்த பூஜைக்குப் பிறகு வழங்கப்படும் விபூதி பிரசாதம் அனைத்து காய்ச்சல்களையும் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு