இலுப்பைக்குடி, தான்தோன்றீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில்
அரியக்குடி அருகில் காரைக்குடியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. குறித்த நேரத்தில் மட்டும்
பேருந்து உண்டு. காரைக்குடியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
இறைவன் : தான்தோன்றீசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி
தல தீர்த்தம் : பைரவர் தெப்பம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இக்கோயிலின் மூலவராக தான்தோன்றீசுவரர் உள்ளார். மூலவர் சிறிய அளவில் உள்ளார். இறைவி திருவாட்சியுடன் காணப்படுகிறார். ஜோதி வடிவமாகி மண்ணுக்குள் புதைந்து பின்னர் லிங்கத் திருமேனியாக ஆனதாவும் கூறுவர். ஜோதியிலிருந்து தோன்றியதால் மூலவர் சுயம்பிரகாசேசுவரர் என்றும் தான்தோன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு : இங்குள்ள பைரவர் ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார். அவரது கையில் அட்சய பாத்திரம் காணப்படுகிறது. வலப்புறம் உள்ள நாய் அவரது பாதத்தைப் பார்க்கிறது. இடப்புறம் உள்ள நாய் நின்ற நிலையில் உள்ளது. இங்கு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார். இக்கோயில் நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இரட்டை நாய் வாகன பைரவராக இத்தலத்து பைரவர் இருப்பது சிறப்பம்சம் ஆகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடது புறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட நாய்க்கடி பலகை இருக்கிறது. இக்கோயிலில் உள்ள குட்டி விநாயகர் சிற்பத்தில் கண் இமையும்,விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு,வாராஹி தேவிக்கு பஞ்சமி தினங்களில் சிறப்பு வழிபாடு,வேறெந்த கோயில்களிலும் இல்லாத நாய்க்கடி பலகை, போன்ற பல்வேறு வியக்கவைக்கும் அற்புதங்களை பெற்ற திருத்தலம்.
தல வரலாறு : இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி இத்திருத்தலத்தில் வழிபாடு செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. ஸ்வர்ணம் தங்கம் தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
சித்திரையில் பிரம்மோற்சவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம் உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயில் நடைபெறுகின்றன.தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடைபெறுகிறது. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் அமைந்துள்ளது. இந்த வாராஹி தேவிக்கு பஞ்சமி தினங்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது பண்டைய தமிழர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை