பெரிச்சி கோயில் 





	


	



























	




 




	








 




8:56:00 PM         Thursday, April 30, 2026

பெரிச்சி கோயில்

பெரிச்சி கோயில்
பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில் பெரிச்சி கோயில்
Product Code: பெரிச்சி கோயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                   பெரிச்சி கோவில், சுகந்தவனேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் அருகே  திருப்பத்துருக்கு, 6 கி.மீ. தொலைவில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ளது

இறைவன் : சுகந்தவனேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

இறைவி  :  சமீபவல்லி

தல தீர்த்தம் : கிணறு  

தல விருட்சம் : வன்னி  

தல சிறப்புகள் :  சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட பைரவர் சிலை பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, கருவரையில் வீற்றிருக்கும், 2 அடி உயரமுள்ள, ஸ்ரீகாசிவயிரவரின் சிலை, நவபாஷாணத்தால் செய்தது. ஆனால், இது பழனியில் இருப்பது போல, வியர்க்கும் தன்மை உடையது இல்லை. அதே போல், இந்த சிலையும், வேறு வகையிலான நவபாஷாணம் கலந்து உருவாக்கப்பட்ட சிலை. இந்தச் சிலையின் வடிவம், முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. கால பைரவரின் தலை முடி, ரோமானியர்களின் முடி போல், சுருள் சுருளாக உள்ளது. அதை விட அதிசயமான காட்சி, இந்தக் கால பைரவர், உடலைச் சற்றுச் சாய்த்து, பிட்சாடணர் தோற்றத்தில் இருக்கிறார். இடது கையில், உடுக்கை இருப்பது தெரிகிறது. வலது, கையில், ஒரு ஆயுதம் ஏந்தி இருப்பது போன்ற தோற்றமும் உள்ளது. வாகனம் இல்லை. மேலும், இந்தச் சிலை, மிக வித்தியாசமானதாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது.

காசியில் இருந்து வந்த போகர் என்னும் சித்தர், இந்த பைரவர் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.  இந்த பைரவர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாத்தப்படும் வடை மாலை போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை.  இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு... மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.

கோவில் அமைப்பு : மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம் இது. நவபாஷாண கால வயிரவரின் சன்னதி, இந்தக் கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ளது. சன்னதி, மேற்கு நோக்கி காணப்படுகிறது. கி.பி. 6ம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இருமுக காசிவயிரவர் சன்னதிக்குப் பின்னால் தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக வன்னிமரத்தடியில் மேற்கு நொக்கியவாறு தனிச்சன்னதியில் இருக்கும் ஒற்றைச் சனீசுவரர் ஆலயம் உள்ளது.

பொதுவாக, தேய்பிறை அஷ்டமி தினங்களில், மற்றும் அஷ்டமி திதியில், கால பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும், மாலை நேரத்தில் தான், அந்த பூஜைகள் வழக்கமாக நடக்கும். தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவருக்கு, விளக்கேற்றி வழிபட்டால், தடங்கலாக இருக்கும், காரியங்களை, தக்க தருணத்தில், கால பைரவர் செய்து முடிப்பார் என்பது நம்பிக்கையான ஒரு ஐதீகம். தேய்பிறை அஷ்டமி நாளில், இவருக்கு தேங்காய் மற்றும் வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஒரு மரபாகப் பின்பற்றப்படுகிறது. கால பைரவரின் வாகனம் நாய். அது பைரவரின் கால்களுக்குப் பக்த்ததில் இருக்கும். ஏறக்குறைய, கால பைரவரின் சிலை எல்லாம், ஒரு சில மாற்றங்களைத் தவிர்த்து, ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், பெருச்சி என்ற ஊரில் உள்ள கால பைரவர் சிலை முற்றிலும் வித்தியாசமானது. வித்தியாசம் கால பைரவரின் சிலையின் தோற்றத்தில்  மட்டுமல்ல. சிலையிலும் தான். 

ஸ்ரீகாசிபைரவர், என்ற இந்த பைரவரின்  வடிவத்தைச் சுற்றி, திருவாச்சியும், சிற்பமாகவே வடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வடிவம், வேறெங்கிலும் காண இயலாதது. இது எல்லாவற்றையும் விட ஹைலைட்டான விஷயம் என்றால், அது இந்த சிலையில், அபிசேகமாக ஊற்றப்படும் பால், விஷமாக மாறுவது தான். இந்தக் கால பைரவருக்கு அபிசேகம் செய்யப்படும் பால், நீல நிறமாக மாறி விடுகிறது. அதனால், இதனை, யாரும் தெரியாமல் பருகி விடக் கூடாது, என்பதற்காக, அபிசேகம் செய்யப்பட்டு, முடிந்தவுடன், மீண்டும் கால பைரவருக்கு, மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை, பூனை மற்றும் நாய் போன்ற விலங்கினங்களும் அருந்துவதைத் தவிர்த்து விடுகின்றன. இருந்தாலும், எச்சரிக்கை நிமித்தமாக, இந்த இரண்டும் கலந்து, அபிசேக நீர் செல்லும் பாதையை, பைப் போட்டு, அதனை வெளியே ஒரு குழிக்குள் உள்ள மண்ணில் விழுந்து விடுமாறு செய்துள்ளனர்.

இதனால், அது வெயில் பட்டதும் காய்ந்து போய் விடுகிறது.  வழக்கமாக ஆஞ்சநேயருக்குத் தான் வடை மாலை சாற்றுவார்கள். ஆனால், இங்கு இந்த கால பைரவருக்கும், வடை மாலை சாற்றப்படுகிறது. இந்த வடை, இந்தக் கோயில், மடப்பள்ளியிலேயே, செய்யப்படுகிறது. சிறிய அளவிலான வடை மாலை சாற்றப்பட்டு, நேரம் ஆக, ஆக, அந்த வடையின் நிறமும் நீலமாக மாறி விடுகிறது. அந்த நீலம், இந்த சிலையில் உள்ள நவபாஷாணத்தின் விஷ வீரியம். அப்படி, வடை நீல நிறமாக மாறியதும், அந்த வடை மாலையை, கோயில் கோபுரத்தின் மேலே எறிந்து விடுகிறார்கள். இந்த வடையைக் காகங்கள் கூட சாப்பிடுவது கிடையாது, என்கிறார்கள்.

இந்த பைரவரை வணங்குவதற்காக, பெரிய அளவில் கூட்டம் வருகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி தினங்களில், இன்னும் விஷேசமாக இருக்கிறது. சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்..

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  காரைக்குடி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×