சாக்கோட்டை





	


	



























	




 




	








 




8:54:16 PM         Thursday, April 30, 2026

சாக்கோட்டை

சாக்கோட்டை
சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை சாக்கோட்டை
Product Code: சாக்கோட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      சாக்கோட்டை, வீரசேகரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில்  உள்ளது.

இறைவன் : வீரசேகரர்

இறைவி  :  உமையாம்பிகை

தல தீர்த்தம் : சோழா குளம் 

தல விருட்சம் : வீரை

தல சிறப்புகள் : இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.வீர சேகரப் பெருமானை காலையில் வந்து வணங்கினால் ஒரு பிறப்பில் செய்த ஊழ்வினைகள் அகலும், மதியம் வந்து வணங்கினால் பத்துப் பிறவிகளின் வினை அகலும், மாலையில் வணங்கினால் நூறு பிறவிகளில் பெற்ற தீவினை அகலும், நாடு இரவில் வந்து வணங்கினால் ஆயிரம் பிறவித் தீமைகள் அகலும் என்றே கூறுவார்கள். வீர சேகரப் பெருமானுக்கு மலர் சாத்தினால்  இந்திரப் பதவியை அடைவார்கள். பூஜைக்கான பொருளைத் தந்தால் இந்திர லோகம் செல்வார்கள். அந்த ஆலயத்துக்கு திருப்பணியை செய்பவர்கள்  கயிலைக்கே செல்வார்கள். 

கோவில் அமைப்பு : ஒன்பது நிலை ராஜ கோபுரத்தைக் கொண்ட இக்கோயிலில் இறைவனும், இறைவியும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்தல விநாயகர் விக்கிரம விஜய விநாயகர் ஆவார். பைரவர் இரட்டை நாய் வாகனக்ளுடன் உள்ளார்.  இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இக்கோவிலின் கோபுரம் உள்ளது. ஏனெனில் இக்கோபுரம் முழுமையான கூம்பு அமைப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு அமைப்பை தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் காண முடியாது. வனமாக இருந்த பகுதிக்கு வந்த வேடன் ஒருவன், ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்குக் கொடியைத் தோண்ட முயற்சிக்கும்போது மண்ணிலிருந்து இரத்தம் வெளிவரவே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது லிங்கத் திருமேனி இருந்ததாகவும், அதை மன்னரிடம் தெரிவிக்க நோய்வாய்ப்ப்பட்டிருந்த மன்னர் அங்கு ஒரு கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர்.   ஆயிரம் வருடத்திற்கு  முற்பட்ட ஆலயம் எனக் கூறப்படும் வீரசேகரர் உமையாம்பிகை சோழ மன்னர் கண்டன் என்பவரால் கட்டப்பட்டது. ஆலயத்துக்குள் நுழைந்ததும்  பெரிய  பிராகாரம் உள்ளது. அதை தொட்டபடி பெரிய மண்டபமும் காணப்படும். கோடி  மரத்தை நோக்கியபடி அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்து இருக்க அவளை நோக்கி உள்ள சன்னதியில் வீரசேகரர் அமர்ந்துள்ளார்.

தல வரலாறு : ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த ஒரு வேடன் ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று புதைந்து இருந்தது. அந்த அதிசயத்தை வேடுவன் ஒரு மன்னரிடம் கூற அந்த சோழ மன்னனும் அங்கேயே அதற்கு ஒரு ஆலயம் எழுப்பினார்.

வீர வனத்தின் அக்கினி மூலையில் வீரன் என்ற பெயரில் ஒரு வேடவத்  தலைவன் வாழ்ந்து வந்தான். அவன் பேராற்றல் மிக்கவன். நல்ல உள்ளம் படைத்தவன்.  ஒரு நாள் அவன் தனது நாயுடன் வனத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு மரத்தடியில் பாம்புப் புற்று  இருந்தது.  அதன் மீது  வள்ளிக் கொடி புதரைப் போல மண்டிக் கிடந்தது.  ஆகவே வள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்க வீரன் அந்த செடியை வெட்டி, புற்றையும் உடைத்தான்.  புற்றை இடித்தவனின் கோடரி அதற்குள் புதைந்துக் கிடந்த சிவலிங்கம் ஒன்றைத் தாக்கியது. கோடரி முனை முழுவதும் ரத்தம் நிறைந்து இருந்தது. சர்வ சாதாரணமாக விலங்குகளை வேட்டை ஆடுபவர்களின் வம்சத்தை சேர்ந்தவன் தனது ஆயுதம் ரத்தத்தினால் நனைந்து இருப்பதைக் கண்டு, உள்ளே யாராவது இருந்திருக்க அவர்களை  நான் அறியாமல் கொலை செய்து விட்டேனோ  என்று பயந்து  முதன் முறையாக தன்னை அறியாமலேயே மூர்ச்சித்து விழுந்தான்.

மூர்ச்சித்து விழுந்த வீரன் வெகு நேரம் அப்படியே கிடக்க அவனுடன் வந்திருந்த நாய் வெகுநேரம் அவனை சுற்றி சுற்றி வந்தது. தனது எஜமானனின் நிலையைப் பார்த்த  அந்த நாய் உடனே அவன் வீட்டிற்கு ஓடிச் சென்று அவன் மனைவியின் எதிரில் குறிக்கலாயிற்று. அவள் புடவையைப் பற்றி இழுத்தது. எஜமானன் இல்லாமல் இது ஏன் தனியாக வந்துள்ளது என்று எண்ணி கலக்கம் பொண்ட வீரனின் மனைவியும் அந்த நாய் ஓடத் துவங்கிய திசையிலேயே தானும் ஓடினாள். அந்த நாயும் வீரன் மூர்ச்சித்துக்  கிடந்த இடத்தை அடைய, அவன் மனைவி திடுக்கிட்டாள். என்ன ஆயிற்று தனது கணவனுக்கு எனப் புரியாமல் விழித்தவள் ரத்தத்துடன் அங்கு கிடந்த கோடாரியையும்  பார்த்தாள்.  குனிந்து அவனுக்கு மூச்சு வருகிறதா எனப் பார்த்ததும், அவன் மூச்சு விடுவதைக் கண்டு சற்றே ஆறுதல் அடைந்தாள். பக்கத்தில் வள்ளிக் கிழங்குச் செடியும் வெட்டப்பட்டு இருந்தது. ஒரு பாம்பு புற்றும் அரைகுறையாக உடைக்கப்பட்டு இருந்தது. அடடடா, புதரில் மறைந்து  இருந்த யாரையாவது தவறாக கொன்று விட்டாரா என சந்தேகமுற்று அவன் தோண்டிய இடத்தின் அருகில் சென்று  பார்த்தபோது, ரத்தம் அங்கு இன்னமும் மெல்லியதாக வந்து கொண்டு இருந்ததைக் கண்டாள். சற்றும் தாமதிக்காமல், அந்த கோடாரியை எடுத்து அந்த இடத்தை இன்னும் தோண்டிப் பார்க்க அங்கு ஒரு சிவலிங்கம் புதைந்து கிடந்ததையும் அதன் தலைப் பகுதியில் இருந்து ரத்தம் வருவதையும் பார்த்தாள். அறியாமல் தன் கணவன் சிவலிங்கத்தை அவமதித்து விட்டாரே  என மனம் கலங்கி அந்த மண் வெட்டியால் தன் தலையில் வெட்டிக் கொண்டு தானும் உயிர் துறக்க முயற்சி செய்தபோது, அவளது நிலையை சிவபெருமான் பார்த்தார். அவள் மீது பரிதாபம் கொண்டார். அவள் பக்கத்தில் நின்று இருந்த நாய் தரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதபடி நின்று இருந்தது.

சிவலிங்கத்தின் மீது இருந்து வடிந்து கொண்டு இருந்த ரத்தமும் நின்றது. வீரனின் மனைவி திடுக்கிட்டு நின்றபோது அவள் எதில் சிவபெருமான் தோன்றினார். தற்கொலை செய்து கொள்ள இருந்தவளை தடுத்து நிறுத்தினார்.  அதைக் கண்டவள்  அழுதவாறே தெரியாமல் ஒரு தவறை செய்து விட்ட தனது கணவனுக்கு உயிர் பிச்சை கொடுக்குமாறு அவரிடம்  கேட்டாள்.  அப்படி அவர் வீரனை உயிர் பிழைத்துக் கொடுத்து விட்டால்  வாழ்நாள் முழுவதும் தேவர்களுக்கு பணி செய்து வருவோமெனவும் உறுதி கூற, சிவபெருமான் அவளது கணவன் மயக்கம் தெளிந்து எழுந்தான்.  மயக்கம் தெளிந்து எழுந்த வீரனிடம்  அவன் அறியாமையில்  செய்த காரியத்தைக் கூறிவிட்டு இன்னமும் அங்கேயே நின்றிருந்த சிவபெருமானக் காட்டினாள். ஆனால் அவள் அவரைக் காட்டியபோது சிவபெருமான் அங்கு இல்லை. ஒரு அந்தணர் மட்டுமே அங்கு  இருந்தார்.  ஆனாலும் இருவரும் அவரை புரிந்து கொண்டு விட்டதினால் அவர் காலில் விழுந்து அவரை வணங்கினார்கள். மகிழ்வுற்ற அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் அவர்களிடம் கூறினார்.

அந்த இடத்தில் வீரன் கட்டி இருந்த மண் கட்டிடத்திற்கு நிழலைக் கொடுத்தவாறு இருந்த வீரை மரம் மட்டுமே அப்படியே விட்டு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த சிற்ப நூல் வல்லுவர்களின்  திட்டப்படி  கர்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிறுத்த மண்டபம், வசந்த மண்டபம், ஊர்த்தி மண்டபம், திருமண மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், ஆலய அரண்கள், வேள்விச் சாலை, திருமடைப் பள்ளி என அனைத்தும் மடமடவென  கட்டி முடிக்கப்பட்டன. இத்தனை நடந்து இருந்தும், பாண்டிய  நாட்டு நகரை தள்ளி  எங்கோ ஒரு மூலையில் இருந்த வனத்தின் நடுவில் நடந்து கொண்டு இருந்தது எதுவுமே பாண்டிய மன்னனுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் தெரியாது. காரணம் நாட்டை விட்டு வெகு தொலைவில் தள்ளி இருந்த அந்த காட்டிற்கு யாருமே செல்வது இல்லை. வேடர்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து  கொண்டு இருந்தார்கள். ஆலயம் அமைக்கப்பட்டு முடிந்தப் பின், காட்டில் தான் தங்கி இருந்த இடத்திலேயே தன் பெயரில் ஒரு ஊரை அமைத்து, அங்கேயே தங்கிக் கொண்டு தினமும் அந்த ஆலயத்துக்குச் சென்று சிவபெருமானையும், உமையவளையும் வணங்கி வந்து கொண்டு இருந்தான்.

கண்டனின் மனைவியின் பெயர் சுசீலை. அவள் நெடு நாட்களாக தனக்கு ஒரு ஆண் மகட்பேறு கிடைக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தாள்.  அதற்காக சிவகங்கை பொய்கையில் முழுகி, ஆலயத்துக்கு சென்று உமையவளை வணங்கி, மாவிளக்கு போட்டு, பூஜைகளை செய்ய, சிறிது காலத்திலேயே நல்ல ஒரு நாளில் அவளுக்கு ஆண் மகவும் பிறந்தது. அந்த ஆண் மகனுக்கு வீர சேகர சோழன் என்ற  பெயரை சூட்டினார்கள்.

ஒருமுறை பிருகு முனிவரால் திருமாலுக்கு சாபம் ஏற்பட்டது. ‘நீ பத்து பிறவிகளை எடுத்து பூமியில் வாழ்வாயாகா’ என திருமாலுக்கு பிருகு முனிவர் சாபம் தந்து விட்டார். ஆகவே திருமால் உடனே கிளம்பி வீர வனம் சென்று அங்கு சிவபெருமானையும் உமையவளையும் வழிபட்டார். தவம் இருந்த விஷ்ணுவின் முன்னால் தோன்றிய சிவபெருமானிடம் திருமால் தனக்கு ஏற்பட்டு உள்ள அந்த சாப விமோசனம் நீங்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். சிவபெருமானும் ‘கவலைப் படேல், அந்த பத்து பிறவிகளிலும் நீங்கள் இந்த உலகிற்கு நன்மை தரும் பிறவியாக வாழ்ந்து  கொண்டு மேன்மையுடன் இருப்பீர்கள்’ என வரம் தந்தது மட்டும் அல்லாமல் தனது ஆலயத்தின் அருகிலேயே நிருத்தி திக்கிலே ஒரு ஆலயம் கொண்டுவீர வசந்த திருமால்’ என்ற பெயரில் இருப்பாயாக என ஆசிர்வதித்தார். திருமாலும் அப்படியே அங்கு எழுந்தருளினார்.

ஊமை, திக்குவாய் போன்ற குறைபாடுகளுடன் உள்ளவர்கள் இங்கு வந்து வீர சேகரருக்கு மணி கட்டி வழிபட்டு மன ஆறுதல் பெறுகின்றனர். குறை நோய், காச நோய், வெண்குஷ்டம்,  மேக நோய், கண் நோய், பக்கவாதம் போன்ற பெரும் வியாதிகளும் கூட அவளை வலம் வந்தால் நொடிப் பொழுதில் நீங்கும். மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் என்பவர் ஒருமுறை குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கிய மாணிக்கவாசகர் இங்குள்ள சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல் புழுங்கல் அரிசி சாதமே இந்த ஆலயத்தில் மூலவருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. 

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  காரைக்குடி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×